கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா வெற்றியை நோக்கி செல்கிறது !

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது . ஆனால் அது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வேகம் என்பது குறைவாகவே உள்ளது. அதன்கொரோனா தொற்றின் நேர்கோட்டு வரைபடம் அதிவேகமானது அல்ல.கொரோனா தொற்று விகிதம் பெரும்பாலும் மாறாமல் இருப்பதால் வளைவு தட்டையாகவே இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, தினமும் சராசரியாக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்பபடுகின்றன

கடந்த 30 நாட்களில்மட்டும் கொரோனா சோதனை 33 மடங்கு அதிகரித்திருந்தாலும் இந்தியாவின் நோய் தொற்று சாராசரி 4.5 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது .கடந்த மாதம் -23 ஆம் தேதி அன்று 14,915 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ஏப்ரல் 22 அன்று அந்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. இவ்வாறு சுற்றுசூழல் செயலாளர் சி.கே.மிஸ்ரா தலைமையிலான கொரோனா தொற்றுக்கான சோதனை மற்றும் சுகாதார உள் கட்டமைப்பு தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட குழுவினரல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்புகளின் வளர்ச்சி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லை. பிறநாட்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றதையே குறிக்கிறது.

இந்த நிலை மேலும் கட்டுப்படுத்தப்பட்டு விரைவில் கொரோனா தொற்று இல்லாத இந்தியாவாக விரைவில் மாறும் என நம்பிக்கை அளிக்கிறது. மேலும் பல மாவட்டங்களுக்கு புதிய கொரோனா தொற்று இல்லாமல் இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். சுமார் இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை

Exit mobile version