பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் மத அடையாளம் பார்த்து 26 இந்துக்களை சுட்டு கொன்ற விவகாரத்தில், இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மற்றுமுள்ள இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்களை குண்டு வீசி தாக்கியது. அதில் சில தீவிரவாதிகள் குடும்பத்துடன் இறந்தனர். 100 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளுக்கு சமாதி கட்டப் பட்டது. இறந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வு, தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்பதை அப்பட்டமாக உலகுக்கு உறுதிப் படுத்தியது.
இந்தியா பாகிஸ்தானில் இயங்கி வந்த 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப் பட்டது. அதை தொடர்ந்து, இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் என்று பாகிஸ்தான் உதார் விட்டுக் கொண்டு இருந்தது. பூஞ்ச் பகுதியில் குடியிருப்புகள் மீது குண்டு வீசி தாக்கியது. அத்துடன், பஞ்சாப் பொற் கோயிலை குறி வைத்து ஏவு கணைகள் வீசப்பட்டன. அவற்றை இந்தியாவின் அதி நவீன வான் பாதுகாப்பு சிஸ்டம் (air defence system) தடுத்து அழித்தது.
பாகிஸ்தான் 400 drone கள் மூலம் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், ராஜாதான், குஜராத் மாநிலங்களில் உள்ள சுமார் 26 இடங்களை குறி வைத்து தாக்கியது. டெல்லியை குறி வைத்து ஏவுகணை அனுப்பியது. 99.9 சதவீதம் drone கள் சுட்டு வீழ்த்தப் பட்டன. இது தவிரவும், அமெரிக்காவின் F16, சீன தயாரிப்பு விமானங்கள் என்று பல பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டன.
ஆபரேசன் “சிந்தூர்”….வீழ்த்தப்பட்ட PAF விமானங்கள் மற்றும் அதை இயக்கிய விமானிகள் பற்றிய தகவல்
1: மிராஜ் 5
இடம்: சியால்கோட்
விமானி பெயர்: W/C ஷௌகத்
சேவை எண்: 40399
ஷாட் கிரெடிட்: ஆகாஷ் AD சிஸ்டம்
நிலை: ராவல்பிண்டியில் உள்ள பாக் எமிரேட்ஸ் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டு, மே 9, 2025 அன்று இறந்தார்
2: F-16
இடம்: ஸ்கர்டு
விமானி பெயர்: W/C அஜீஸ்
சேவை எண்: 44998
ஷாட் கிரெடிட்: விண்கல் வழியாக ரஃபேல்
நிலை: ராவல்பிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டார்
3: F-16
இடம்: முசாஃபராபாத்
விமானி: W/C ஷாபாஸ் கான்
சேவை எண்: 00987
ஷாட் கிரெடிட்: S-400 AD சிஸ்டம்
நிலை: ராவல்பிண்டியில் உள்ள பாக் எமிரேட்ஸ் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டு, நிலையான நிலையில் உள்ளது.
4: JF-17
இடம்: முரிட்கே
விமானி: W/C குர்ராம் அப்பாஸ்
சேவை எண்: 55432
ஷாட் கிரெடிட்: S-400 AD சிஸ்டம்
நிலை: ராவல்பிண்டியில் உள்ள பாக் எமிரேட்ஸ் ராணுவ மருத்துவமனையிலும், பின்னர் ராவல்பிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனையிலும் நடத்தப்பட்டது
5: SAAB AWACS
இடம்: குஜராத்
விமானி: W/C மன்சூர்
சேவை எண்: 66200
ஷாட் கிரெடிட்: S-400 AD சிஸ்டம் (கிட்டத்தட்ட 300 கிமீ தூரத்தில் உள்ள எந்தவொரு AD அமைப்பாலும் மிக தொலைவில் கொல்லப்படும்)
நிலை: ராவல்பிண்டியில் உள்ள பாக் எமிரேட்ஸ் ராணுவ மருத்துவமனையில் நடத்தப்பட்டது
6: 2 C-130Js
அடித்தளம்: நூர் கான் விமானப்படை தளம்
ஷாட் கிரெடிட்: பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை ஆழமான டைவ் மாறுபாடு
உயிரிழப்புகள்: PAF தரை ஊழியர்களின் 10 இடங்களில் இறப்புகள்
7: SAAB AWACS
அடித்தளம்: போலாரி விமானப்படை தளம்
ஷாட் கிரெடிட்: பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை
உயிரிழப்புகள்: 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இதில் W/C உஸ்மான் யூசப் உட்பட…..
இந்திய தரப்பில் பெரிய அளவில் இழப்பு இல்லை என்றாலும், இழப்பு எதுவும் இல்லை என்று கூற முடியாது. இது இருநாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் போது ஏற்படும் சாதாரண நிகழ்வுதான்.
பாகிஸ்தான் உடனான போரில் இந்தியா பெரும் வெற்றியை அடைந்து, நாடே பெருமை பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், எப்பவும் போல் அன்னிய சக்திகளுடன் கை கோர்த்து மோடி அரசை வீழ்த்துவதில் குறியாக இருக்கும் ராகுல் காந்தி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கப்படதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக கண்டனம் தெரிவித்து, நமது தாக்குதலை முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிவித்தது குற்றம் எனவும், யார் அதற்கு அனுமதியளித்தது எனவும் வினவியிருந்தார். முன்கூட்டியே தெரிவித்ததால், எத்தனை போர் விமானங்களை நமது விமானப்படை இழந்தது எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகே பாகிஸ்தானுக்கு எச்சரிக்கப்பட்டதாகவும், அதற்கு முன்பாக எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறியிருந்தது. பாகிஸ்தான் பிரதமர் கூட, வெளி நாடு ஒன்றில் பேசுகையில், நாங்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த நேரத்துக்கு முன்பாக இந்தியா தாக்குதல் நடத்தி எங்களது விமான தளங்கள் மீது குண்டு வீசியது என்று குறிப்பிட்டு உள்ளார்.
பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 11 ராணுவ விமான தளங்களில் 8 ஐ இந்தியா 23 நிமிடங்களில் தாக்கி அழித்தது.
முக்கியமாக, பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் வைத்து இருக்கும் இடத்தில் உள்ள விமான தளம் சேதப் படுத்தப் பட்டது மட்டும் அல்ல அவர்களின் அணு ஆயுத பங்கர் முகப்பில் குண்டு வீசி எச்சரிக்கை செய்யப் பட்டது. இது உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடந்திராத செயல் ஆகும்.
ராகுல் காந்திக்கு பதில் அளிக்கும் வகையில், பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப் படை எத்தனை போர் விமானங்களை இழந்தது என்று ராகுல் காந்தி தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறார்.
பாகிஸ்தான் விமானப் படை எத்தனை போர் விமானங்களை இழந்தது? எத்தனை பாகிஸ்தான் விமான படைத் தளங்கள் அழிக்கப்பட்டன என்று அவர் கேள்வி எழுப்பவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் ராகுல் காந்திக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ‘‘நிஷான் -இ- பாகிஸ்தான்’’ வழங்கப்படலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் ஒரு கார்ட்டூன் புகைப்படத்தை வெளியிட்டார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில், “இன்றைய நவீன கால மிர் ஜாபர்- ராகுல் காந்தி’’ என்று விமர்சித்து உள்ளார்.யார் இந்த மிர் ஜாபர்? இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் கால் பதித்த காலத்தில் ஆட்சியையும் கைப்பற்ற திட்டமிட்டது. இதன்படி கடந்த 1757-ம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனிக்கும் வங்கதேச நவாப் சிராச் உத் தவ்லாவுக்கும் இடையே பிளாசி போர் நடைபெற்றது.
அப்போது வங்கதேச நவாப் சிராச் உத்தவ்லாவின் படைத் தளபதி மிர் ஜாபர், கிழக்கிந்திய கம்பெனியுடன் ரகசியமாக கைகோத்தார். மிர் ஜாபரின் சதியால் நவாப் சிராச் உத் தவ்லா போரில் தோல்வி அடைந்தார். இந்திய வரலாற்றில் துரோகத்தின் சின்னமாக மிர் ஜாபர் கருதப்படுகிறார்.
பாகிஸ்தானுடனான போரில் இந்தியா பெற்ற வெற்றியை நாடே கொண்டாடும் வேளையில், அந்த வெற்றிக்கு கதாநாயகனாக இருக்கும் இந்திய ராணுவம் மற்றும் மோடிக்கு அவப்பெயர் சேர்க்கும் விதமாக ராகுல் காந்தியின் செயல்பாடு உள்ளது.