எல்லைப்பகுதி லடாக்கில் இருந்து இந்திய வீரர்களை முழுமையாக திரும்ப பெறமுடியாது: சீனாவிற்கு பதிலடி!


லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில், சீன தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

இந்திய-சீன இரு நாடுகளின் முன்னணிப் படைகளும் தங்களது எல்லைகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் இருந்து திரும்ப சென்றவிட்டதாக கூறிய சீனாவின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக்கில் வீரர்களை திரும்ப பெறுவதற்கான செயல்முறையில் இன்னும் முன்னேற்றங்கள் காணப்படவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த எல்லை பதற்றத்தை தொடர்ந்து, அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், எல்லையில் வீரர்களை திரும்ப பெற இரு நாடுகள் ஒப்பதல் தெரிவித்திருந்தன. இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்னர் நிலைமை இயல்புக்கு திரும்பி வருவதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்திய வீரர்களை திரும்ப பெறும் பணியில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, எனினும், அதற்கான செயல்முறை முழுமயாக முடிக்கப்படவில்லை என வெளியிறவு அமைச்சக செய்திதொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். 

வரும் நாட்களில் இரு தரப்பிலும் மூத்த தளபதிகள் நேரில் சந்தித்து வீரர்களை திரும்ப பெறுவதற்கான செயல்முறைகளை நிறைவு செய்யும் நடவடிக்கைக்களை மேற்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார். 

நாங்கள் முன்பே கூறியது போல், எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணுவது எங்கள் இருதரப்பு உறவின் அடிப்படையாகும். எனவே, சிறப்பு பிரதிநிதிகள் ஒப்புக் கொண்டபடி, எல்லைப் பகுதிகளில் அமைதியை முழுமையாக மீட்டெடுப்பதற்கும், படைகளை திரும்ப பெறுவதற்கும், முழுமையான மறுசீரமைப்பிற்கும் சீனத் தரப்பு எங்களுடன் உண்மையாக செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், “என்று அவர் மேலும் கூறினார்.

எது நடந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version