பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியங்களை செலுத்தியதன் மூலம் டிசம்பர் 2014 லிலிருந்து மார்ச் 31, 2020 வரையிலான ஐந்தரை வருடங்களில், ரூபாய் 1 லட்சத்து 78 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2ஜி விவகாரத்தில் தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசால் தேசத்திற்கு ஏற்பட்ட இழப்பை விட அதிகமாக பாஜக அரசு சேமித்துள்ளது.
ஜன்தன், ஆதார், அலைபேசி (JAM) மூலம் 337 திட்டங்களில் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
எரிவாயு உருளை திட்டத்தில் போலி பயனாளிகள், தவறான இணைப்புகள், செயல்பாட்டில் இல்லாத இணைப்புகள், மானியம் வேண்டாம் என்று விட்டுக்கொடுத்த மக்கள் என 4.49 கோடி இணைப்புகளின் மூலம் இது வரை 71,301 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
பொது விநியோக முறை திட்டத்தில் (ரேஷன் அட்டை) சுமார் 3 கோடி போலி பயனாளிகள் அகற்றப்பட்டதன் அடிப்படையில், கடந்த 5 வருடங்களில் 66,897 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 3 கோடிக்கும் அதிகமான போலி பயனாளிகள் அகற்றப்பட்டதன் மூலம், 25,672 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு உருளையில் சேமிக்கப்பட்ட பணத்தை 8 கோடிக்கும் அதிகமான ஏழை எளிய மக்களுக்கு புதிய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பொது விநியோக திட்டத்தில் சேமிக்கப்பட்ட பணம் நாடு முழுதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தில் கடையனையும் கடைத்தேற்றும் ‘அந்த்யோதயா அன்னயோஜனா’ திட்டத்தின் கீழ் பல கோடி மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 14 விழுக்காடுக்கும் அதிகமானோர் போலி பயனாளிகளாக இருந்து வந்த நிலையில், ஏமாற்றி, மோசடி செய்து கொண்டிருந்தவர்களை அகற்றி உண்மையியேயே தேவையுள்ளவர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டு ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது பாஜக அரசு.
கடந்த காங்கிரஸ் அரசு 1.75 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை உருவாக்கிய நிலையில்,
தற்போதைய பாஜக அரசு 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சேமிப்பின் மூலம் வருவாயை அதிகரித்துள்ளது.
அதோடு கூட, ஏழை எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டிய திட்டங்களின் மூலம் சுரண்டி கொள்ளையடித்து கொண்டிருந்தவர்களை அகற்றி உண்மையிலேயே மானியங்கள் தேவைப்படும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்துள்ளது.
ஊழல், லஞ்சம், முறைகேடுகளை ஒழித்து நேர்மையான நிர்வாகத்தை செலுத்தி கொண்டிருக்கும் நரேந்திர மோடி அரசின் மக்கள் பணி தொடரும்.
நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.