ஆஃப்கானிஸ்தானில் உள்ள வடக்கு கூட்டணி படையினரை தாக்க பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதிக்குள் தாலிபான்கள் சென்று போது அவர்கள் பலரை சிறைப்பிடித்தது அஹ்மத் மஸூத் தலைமையிலான முஹாஜின்கள்.
இதற்கு பழிவாங்க தாலிபான்கள் பாகிஸ்தானிடம் உதவி கோரினார்கள் தலிபான்கள்.பாகிஸ்தானும் தங்கள் நாட்டின் விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன் படுத்தி தாலிபான்களை பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதிக்குள் கொண்டு சென்றனர் மற்றும் விமானங்கள் மூலமாக ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இதில் பலத்த தேசம் ஏற்பட்டாலும் அஹ்மத் மஸூத் மற்றும் ஆஃப்கானிஸ்தானிய தற்போதைய காபந்து ஜனாதிபதி அம்ருல்லா ஸாலே ஆகியோர் தப்பி இருக்கிறார்கள். இதனிடையே பாகிஸ்தானிய ஆதரவு தாலிபான்கள் மீது இரண்டு மர்ம விமானங்கள் நேற்று பகல் பொழுதில் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
இது பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. மிக முக்கியமான பாகிஸ்தான் ஆடிப் போய் இருக்கிறது.சேத நிலவரத்தை வெளியிட கூடாது என்று பலமான கட்டளை பிறப்பித்துள்ளது பாகிஸ்தான்.
யார் இந்த விமானங்களை இயக்கியது? எந்த நாட்டின் விமானப்படை விமானங்கள் அவை? ஏன். எதற்காக.யாருக்காக வந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பது போன்ற தகவல்கள் தற்போது வரை வெளியிடவில்லை..
விமானங்கள் ஆஃப்கானிஸ்தானிற்கு உள்ளே வந்த பாதை வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை ஆஃப்கானிஸ்தானிற்கு கிழக்கில் உள்ள நாடுகள்.வடக்கில் மற்றும் வட மேற்கில் ரஷ்யா வருகிறது.
போர் விமானங்களை கொண்டு தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்திய விமானங்கள் யாருடவை???? பாகிஸ்தான் மற்றும் தாலிபான்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கிறது வந்த விமானங்கள் யாருடையது என்று.ஆனாலும் அவர்களால் வாய் திறக்க முடியவில்லை..
அதுபோலவே. மேற்கத்திய நாடுகளுக்கும் மிக நன்றாகவே தெரியும் இது எந்த நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் என்பது. அவர்களும் மூக்கின் மேல் விரல் வைத்த கதையாக இந்த சம்பவத்தை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
வெளிப் பார்வைக்கு வடக்கு கூட்டணி படையினரை ஆதரிப்பவர்கள் இந்தியா என்பது அல்லது வடக்கு கூட்டு படையினர் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருப்பது உலகறிந்த ரகசியம்.அவர்களை இரவு வேளையில் சொல்லாமல் கொள்ளாமல் பாகிஸ்தான் தனது விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது.
இதற்கு பதிலடியாக தான் தாலிபான்கள் மீதான தாக்குதலுக்கு உத்தரவு கொடுக்குப்பட்டது என்கிறார்கள்.இது போன்ற பாதுகாப்பு காரணங்களுக்காக தான் தஜிகிஸ்தானில் உள்ள விமான படை தளம் பராமரிக்கப்படுகிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
இது பாகிஸ்தானுக்கும் அதன் பின்னணியில் உள்ள சீனாவிற்கும் மறைமுகமாக விடுக்கப்பட்ட சவால் என்கிறார்கள்.களத்தில் உள்ள எவருக்கும் இதற்கெல்லாம் காரணம் இந்தியா தான் என்று தைரியமாக கைக்காட்டிட முடியவில்லை என்பது தான் அங்கு தற்போது உள்ள நிலவரம்.