டில்லி பல்கைலைகழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுமாணவர்க சங்க தேர்தல் நடைபெற்றது. 2020 மற்றும் 2021 ம் ஆண்டுகளில் கொரோனா காலகட்டமாதலால் தேர்தல் நடத்தப்படவில்லை . கடந்த 2022-ல் பல்கலையில் ஏற்பட்ட குளறுபடிகளாலும் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது இந்தாண்டு தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் RSS மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., அமைப்பை சேர்நதவர்களும் காங்கிரஸ் உடன் இணைந்த இந்திய தேசிய மாணவர் சங்கம் மற்றும் எஸ்.எப்.ஐ., உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாணவர்கள் போட்டியிட்டனர். தலைவர், துணை தலைவர் செயலாளர் ,துணைசெயலாளர் என நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 24 பேர் களம் கண்டனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் தேர்தல் நடைபெற்றதால் மாணவர்களிடையே விறுவிறுப்பு காணப்பட்டது.
தேர்தல் நடத்தும் பொறுப்பு அதிகாரியாக இருந்த பேராசிரியர் சந்திரசேகர் கூறி இருந்ததாவது: தேர்தலில் 42 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. பல்கலை.,க்கு உட்பட்ட 52 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் மூலம் வாக்கு பதிவு நடைபெற்றது. தேர்தலில் தலைவர் பதவியை ஏ.பி.வி.பி., கைப்பற்றியது. துணை தலைவர் பதவியை என்.எஸ்.யூ.ஐ., -ம் செயலாளர் மற்றும் துணை செயலாளர் பதவிகளை ஏ.பி.வி.பி., கைப்பற்றியது என்றார்.
தலைவர் மற்றும், செயலாளர், துணை செயலாளர் பதவிகளை கைப்பற்றிய ஏ.பி.வி.பி., க்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் கிரண்ரிஜூஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெற்றியாளர்கள் மற்றும் ஏ.பி.வி.பி.,நலம் விரும்புவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டு உள்ளார்.
மாணவர் சங்க தேர்தலில் விளம்பர செலவு உள்ளிட்டவைகளுக்கு சுமார் 60 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.