உலகம் முழுவதும் இன்று ஆட்சி செய்து கொண்டிருப்பது கொரோனா எனும் நுண் கிருமி தொற்று. இந்த வைரஸ் மூலம் பல லட்சம் மக்கள் உயிர் இழந்துள்ளார்கள். பல லட்சம் மக்கள் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா வேகமாக பரவி வந்த நிலையில். இதை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24 ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக 30 லட்சம் மக்கள் இந்த நோய் தொற்றுலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள். பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கு சில தளர்வுகளுடன் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தை மீட்க ஆத்ம நிர்பார் சுயசார்பு இந்தியா திட்டம் வழிவகுக்கும் என்றார். உள்நாட்டுத் தயாரிப்புகளை வாங்க ஊக்குவிக்க வேண்டும் என மக்களை வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, மக்கள் உள்நாட்டுத் தயாரிப்புக்கு குரல் கொடுக்க வேண்டும் எனவும் அப்போது தெரிவித்தார்.
நாட்டில் முடங்கியுள்ள வர்த்தக செயல்பாடுகளுக்கு தேவையான ஊக்கத்தை ஆத்ம நிர்பார் இந்தியா திட்டம் மூலம் அளிக்க முடியும். இதற்கு மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உற்பத்தியை அதிகரிப்பது, குறைந்த தொழில்நுட்பப் பொருட்களை பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு மாற்றாக, குறைந்த விலையில் கிடைக்கும் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் ஜன் சம்வாத் பேரணியில் வீடியோ கான்பரசிங் மூலம் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும், நமது நாடு ஏற்றுமதி நாடாக அறியப்பட வேண்டுமே தவிர, இறக்குமதி நாடாக அறியப்படக் கூடாது என்றார்.
இந்தியா – சீனா எல்லை பிரச்சினை குறித்து பேசிய ராஜ்நாத் சிங், “இந்த விவகாரம் நீண்டகாலமாக நிலவி வருகிறது. இதனை விரைவில் தீர்க்க வேண்டும். கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. எல்லை பிரச்சினையை விரைவில் தீர்க்கும் பொருட்டிலான பேச்சுவார்த்தையை தொடர இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன” எனவும் தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















