லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில், சீன தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன் பின் உயர்மட்ட ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன வீரர்கள் பின்வாங்கி சென்றார்கள்.
கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 6 எல்லைகளில் அத்துமீற முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் 500 சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் சீன வீரர்களை அடித்து விரட்டியுள்ளார்கள் . இதை சாட்டும் எதிர்பார்க்காத சீனவிற்கு இந்தசம்பவம் இடியாக இறங்கியுளளது. இதன்காரணமாக லடாக் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் எழுந்தது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பு ராணுவ உயரதிகாரிகள் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் 3 மலை முகடுகளை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. அந்தப் பகுதியில் சீன ராணுவம் புதிதாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். இதைத் தொடர்ந்து பான்காங் ஏரியின் தெற்கு கரையில் பிளாக் டாப், ஹெல்மெட் பகுதியில் அமைந்துள்ள 3 மலைமுகடுகளையும் இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. அங்கு சீன ராணுவம் பொருத்தியிருந்த கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந்திய தரப்பில் ஒரு சிறப்பு ஆப்பரேஷன் நடைபெற்றது. ஆகஸ்ட் 29-30 ஆம் தேதி இரவன்று இந்த இந்திய ராணுவவீரர்கள் அந்தப் பகுதிக்கு சென்று அந்த முகட்டைக் கைப்பற்றியது. மேலும் அங்கிருந்த கேமராக்களை அகற்றியது அப்போது சீனப் படையினர் அதிலிருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் மட்டும்தான் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையால் சீன என்ன செய்வது என்று புரியாமல் நிற்கிறது. சீனாவின் மீது எந்த நேரத்திலும் தாக்கல் நடத்தவும் இந்தியா தயாராக உள்ளது என அங்கிருக்கும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















