காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து பதில் தாக்குதலை நடத்த இந்திய ராணுவம் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது, இதுபற்றிய தகவல்கள் பகிரபட வேண்டும் என இந்திய ராணுவம் மற்றும் மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. ஆனால் சர்வதேச ஊடகங்களில் இந்தியவின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்தும் சில செய்திகள் வந்த வண்ணம் உள்ளது
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக அரபிக்கடலில் நம் நாட்டின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் மூலம் எதிரி நாடுகளை கொடூரமாக தாக்கி அழிக்க முடியும் என்பதால் பாகிஸ்தான் கலக்கமடைந்துள்ளது
இந்தியாவின் சொந்த தயாரிப்பான ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் , 50 விமானம் 10 ஹெலிகாப்டருடன் கராச்சி அருகே நிலை கொண்டுள்ளது, ஒரு விமானம்தாங்கி கப்பல் தனியே செல்லாது அதனை சுற்று பாதுகாப்பு கப்பல்கள் சூழ நிற்கும், கீழே நீர்மூழ்கிகள் காவல் கொடுக்கும்இது பெரும் செலவும் நேரமும் பிடிக்கும் விஷயம் அதாவது மிக முக்கிய காலத்தில்தான் இந்த வியூகம் காட்டபடும்
விஷயம் சொல்வது பாகிஸ்தானின் வான்வெளி அந்நாட்டால் மூடபட்டிருக்கலாம் ஆனால் கடல் வெளி இந்திய கடற்படையால் முற்றுகையிடபட்டு இந்திய ஆதிக்கம் கீழ் வந்திருக்கின்றது
ஐஎன்எஸ் விக்ராந்தை எடுத்து கொண்டால் இந்திய கடற்படையின் மிகவும் வலிமையான போர்க்கப்பலாகும். இந்த போர்க்கப்பல் என்பது கடந்த 2022ம் ஆண்டில் நம் கடற்படையுடன் சேர்க்கப்பட்டது. இந்த கப்பல் தான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். இது ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்களாகும். ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் ஒரே நேரத்தில் 30 போர்விமானங்கள் வரை நிறுத்த முடியும்.
அதேபோல் கடற்படை ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும். போர் விமானங்களை எடுத்து கொண்டால்26 மிக்-29கே ரக விமானங்கள், 4 காமோவ்-31 ரக ஹெலிகாப்டர்கள், 4 எம்.எச். 60ஆர் ஹெலிகாப்டர்கள், இலகுரக 2 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை நிறுத்த முடியும்.இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் அதிகபட்சமாக மணிக்கு 28 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியாது. 7,500 நாட்டிக்கல் மைல் தூரம் வரை தொடர்ந்து செல்லும் திறன் படைத்தது. 43,000 டன் எடையுள்ள இந்த கப்பலில், பயன்படுத்தப்பட்டுள்ள மின் வயர்களின் மொத்த நீளம் 2,500 கி.மீ. இதில் மொத்தம் 2,300 அறைகள் உள்ளன. ஐஎன்எஸ் விக்ராந்த் மொத்தம் 262 மீட்டர் நீளம் கொண்டது. 59 மீட்டர் உயரம் கொண்டது. 62 மீட்டர் அகலம் கொண்டது. *
போர்க்கப்பலில்மருத்துவமனை, தீவிர சிகிச்சை பிரிவு, தனிமைபடுத்தப்படும் அறைகள் ஆகியவையும் இதில் உள்ளன. இந்த கப்பலில் அதிநவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கப்பல் மூலம் கடலில் வெகு தொலைவில் இருந்து வான் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். மேலும் இந்த கப்பலால் உடனடியாக அரபிக்கடலில் பாகிஸ்தான் எல்லை அருகே செல்ல முடியும். அங்கிருந்து இந்த கப்பல்கள் மூலம் விமானங்களை பாகிஸ்தான் எல்லைக்குள் பறக்கவிட்டு அதிரடி தாக்குதல் நடத்த முடியும். இதனால் பாகிஸ்தான் கதிகலங்கி உள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் நம் நாட்டின் கடற்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்நாட்டு தயாரிப்பாக ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை வானில் சீறிப்பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்குகிறது. எதிரி நாட்டின் ஏவுகணையை துல்லியமாக அழிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையும் அரபிக்கடலில் தான் மேற்கொள்ளப்பட்டது. ஐஎன்எஸ் சூரத் என்பது எதிரி நாடுகளின் ஏவுகணையை அழிக்கும் திறமை கொண்டது. அதேபோல் ஐஎன்எஸ் விக்ராந்த் என்பது எதிரி நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் வகையிலான போர்விமானங்களை சுமந்து செல்லக்கூடியது. இதன்மூலம் பாகிஸ்தான் கடல் வழியாக நம்மை தாக்க முயன்றால் அதனை தடுக்கவும், பதிலடி கொடுக்கவும் இந்தியா தயாராகி விட்டது. இது பாகிஸ்தானுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த எச்சரிக்கையினை தொடர்ந்துதான் பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் “நாங்கள் மேற்கத்திய நாடுகளுக்கான தீவிரவாத பயிற்சியினை கொடுத்து நாசமானோம்” என்பது அதாவது இந்திய கப்பல்படையே பாகிஸ்தானின் சோலிமுடித்துவிடும் இதனால் “ஏ மேற்கத்திய நாடுகளே, ஒழுங்காக இந்தியாவினை தடுக்காவிட்டால் ரகசியங்களை வெளிசொல்லி உங்களை அவமானபடுத்திவிட்டு சாவோம்” என மிரட்டுகின்றது பாகிஸ்தான்
ஆனால் ஆனான்பட்ட பின்லேடன் சொல்லியே அசையாத மேற்குலகம் பாகிஸ்தானை கண்டுகொள்ளவில்லை , அததான் அரசியல் அமெரிக்க தளபதிகள் ஒருபடி மேலே போய் இது காசாவில் இஸ்ரேல் எதிர்கொண்ட மோதல் போன்றது என பேசியிருக்கின்றார்கள் அதன் அர்த்தம் தாக்குதல் நடந்த்த இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு என்பதுஇப்படி பரபரப்பான காட்சிகள் இடையே இந்திய விமானபடை தன் நவீன விமானங்களுடன் பயிற்சியில் ஈடுபடுகின்றது, இன்னொரு பக்கம் எஸ் 400 போன்ற வான்பாதுகாப்பு சாதனங்கள் இயங்கு நிலைக்கு நகர்த்தபடுகின்றன
2023ல் அக்டோபர் 7ல் ஹமாஸ் தீவிரவாதிகள் எதிர்பாரா தாக்குதலை இஸ்ரேல் மேல் தொடுத்தார்கள், இஸ்ரேல் பதிலடியினை சில தினங்கள் கழித்தே தொடங்கியது, நீண்ட கால தாக்குதலுக்கு அப்படி நாட்கள் எடுக்கும் இந்தியா ஒரு முடிவோடுதான் களமிறங்குகின்றது
இந்நிலையில் இந்திய தேசம் தன் அதிநவீன உளவு சாட்டிலைட்டை விண்ணுக்கு ஏவும் முயற்சியில் இறங்கியுள்ளது, இது யுத்தத்துக்காக அவரசமான தயார்நிலை இந்தியாவின் 55 சாட்டிலைட்டுகள் வானில் நின்றாலும் மிக மிக நவீன சாட்டிலைட்டை நிறுவும் திட்டம் செயலில் இருந்தது, அவசரகாலத்தை முன்னிட்டு இது இன்றோ நாளை வானுக்கு அனுப்படும்
ஆக எல்லாமே சரியாக நடக்கின்றது, பாகிஸ்தான் தாங்கள் முற்றுகையில் சிக்கியதை அறிந்து அலறுகின்றது பாகிஸ்தான் தன் சில அல்லக்கை மூலம் தன் உள்நாட்டு பிரச்சினையினை சமாளிக்க போருக்கு வர திட்டமிட்டுத்தான் இதையெல்லாம் செய்வதாக இன்னும் ஏதேதோ கிளப்புகின்றது
பலுசிஸ்தான் முதல் எல்லா சிக்கலையும் சமாளிக்க எல்லையில் ஒரு போர் அவசியம் என பாகிஸ்தான் கருதி இதை செய்வதாக சில பாகிஸ்தானிய செய்திகள் சொல்கின்றன
இது அரசியல் நெருக்கடி என்றால் சரி, அரசு தன் ஆட்சியினை நிலைக்க செய்யும் வழி என சொல்லலாம் ஆனால் உள்நாட்டிலே எப்போது யார் எங்கே மோதுவார் எனும் அச்சம் இருக்க, பலுசிஸ்தான் எந்நேரமும் தனிநாடாகும் ஆபத்து இருக்க, பாகிஸ்தான் ராணுவத்துக்கே சம்பளம் இல்லா நிலை இருக்க இப்படி செய்ய மாட்டார்கள்இருந்து பாருங்கள் இப்போதுதான் மேற்கத்திய நாடுகளை மிரட்ட தொடங்கியிருக்கின்றார்கள், இனி என்னவெல்லாமோ சொல்லி கத்துவார்கள், கடைசியில் எங்கே வந்து காலை பிடிப்பார்கள் தெரியுமா? “இது எங்களுக்கும் இந்தியாவுக்கும் மோதலை செய்ய யாரோ செய்த சதி” என்பார்கள், அப்போது இருக்கின்றது ஒரே மிதி
