பாகிஸ்தானின் அடிமடியில் கைவைத்த இந்தியா…. பாக் பிரதமருக்கு விழுந்த ஆப்பு! நிலைமையே மாறுதே! சோலி முடிஞ்ச்!

pak pm

pak pm

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்பை போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சர்வதேச அளவில் விவாதங்களாக வெடித்திருக்கிறது. இதுபற்றிய விசாரணை மற்றும் இதர நடவடிக்கைகளில் இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமருக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக கண்டித்திருக்கிறார். மேலும் இந்தியா மேற்கொள்ளும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதேபோல இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றங்களை குறைத்து, தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும் போனில் பேசிய ரூபியோ, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுடனான பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு தொடரும் என்றும் கூறியிருக்கிறார். ரூபியோவின் பேச்சு சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ரூபியோவை தொடர்ந்து, ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ், ஜெய்சங்கரிடமும், ஷெபாஷ் ஷெரிப்புடனும் தனித்தனியாக போனில் பேசியிருக்கிறார்.

பஹல்காம் தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள அவர், நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தாக்குதலையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்பட்டு பதற்றம் அதிகரித்திருப்பதற்கும் அவர் கவலை தெரிவித்திருக்கிறார். தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயும் அமைதி ஏற்படுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஐநா செய்ய தயார் எனவும் கூறியிருக்கிறார்.

ஐநா தலைவரே நேரடியாக தலையிட்டு இந்த விஷயத்தில் பாகிஸ்தானை கண்டித்திருப்பதும் அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த நடவடிக்கை பாகிஸ்தானை உசுப்பேற்றியிருக்கிறது. அறிவிக்கப்படாத போர் என்று இதனை பாக். கூறியிருக்கிறது. மட்டுமல்லாது இதற்கு பதிலடி என்று சொல்லி சிம்லா ஒப்பந்தத்தையும் பாக். ரத்து செய்திருக்கிறது.

இந்தியா தரப்பில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசார ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், தங்களது அதிகாரிகளை அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பவும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு பதிலடியாக இந்திய விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த கூடாது என பாக். தடை விதித்திருக்கிறது.

இதனையடுத்து இன்று முதல் இந்திய வான் பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கவும் மத்திய அரசு தடை விதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.பாகிஸ்தான் விமானங்கள் ஏற்கனவே கடந்த சில நாட்களாக இந்திய வான்வெளியைப் பயன்படுத்துவதை தவிர்த்தே வந்தது. இந்தச் சூழலில் இப்போது அதிகாரப்பூர்வமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை, சீனா அல்லது தென்கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தான் விமானங்கள் இனி இந்தியா வான்வெளியைப் பயன்படுத்தாமல் சுற்றிச் செல்ல வேண்டும். இதன் மூலம் எரிபொருள் செலவு அதிகரித்து, பாகிஸ்தானில் விமான டிக்கெட் உயரும்.

மேலும், பாகிஸ்தானில் உள்ள விமான நிறுவனங்கள் ஏற்கனவே கடுமையான நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர்கள் இந்தியா சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் எரிபொருள் அதிகம் செலவாகும். இது பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும். மேலும், பயண நேரத்தையும் அதிகரிக்கும். இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களின் பட்டியலைத் அளிக்குமாறு மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.

அவசரமாக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தகவலை DoP கோரியுள்ளது. தரவுகளின்படி, இந்தியாவின் மருந்து ஏற்றுமதி சந்தையில் 219 நாடுகளில் பாகிஸ்தான் 38வது இடத்தில் உள்ளது. 2023 நிதியாண்டில், இந்தியா $191.36 மில்லியனை ஏற்றுமதி செய்தது, அதைத் தொடர்ந்து 2024 நிதியாண்டில் $176.54 மில்லியனை ஏற்றுமதி செய்தது. சமீபத்திய தரவுகளின்படி மருந்து ஏற்றுமதி வர்த்தகம் சுமார் $200 மில்லியனாக உள்ளது.

துபாய் வழியாக சமயங்களில் பாகிஸ்தானுக்கு இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்யும். இந்தியா மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யும். அதை பாகிஸ்தான் துபாயில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதற்கான லிஸ்டையும் மத்திய அரசு கேட்டு உள்ளது

பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பல துறைகள் கடுமையான விளைவுகளை, சரிவுகளை சந்திக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக அங்கே மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் இதனால் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஆர்ஏபி) அங்கே கடும் பரபரப்பில் உள்ளது. பாகிஸ்தானின் மருந்து விற்பனையில் 40 சதவிகிதம் வரை இந்தியாவில் இருந்து நேரடியாகவும்.. இந்தியாவில் உருவாக்கப்பட்டு வேறு நாடுகள் வழியாகவும் பாகிஸ்தானுக்கு செல்கிறது.

இப்போது பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் மருத்துவ துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது,​​பாகிஸ்தான் அதன் மருந்து மூலப்பொருட்களில் 30% முதல் 40% வரை இந்தியாவை நம்பியுள்ளது, இதில் செயலில் உள்ள மருந்து பொருட்கள் (API) மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சை பொருட்கள் அடங்கும்.. இதெல்லாம் பாகிஸ்தானுக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் அதன் மருந்து மூலப்பொருளில் 30%-40% இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. மிக முக்கியமாக, புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகள், உயிரியல் தயாரிப்புகள், தடுப்பூசிகள் மற்றும் செரா, குறிப்பாக ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் பாம்பு விஷத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. கிட்டத்தட்ட பாகிஸ்தானின் மருத்துவ துறையின் ப்யூஸை பிடுங்கி உள்ளது இந்தியா. மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது.
இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்த நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்கு கிடைப்பது கடினம்.

இனி நிர்வாக ரீதியாக அட்டாக் செய்ய இந்தியா தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது பாகிஸ்தான் அரசியலில் மறைமுகமாக ஆட்டத்தை ஏற்படுத்துவது. அங்கே அரசியல் நிலையற்ற தன்மையை உளவாளிகள் மூலம் ஏற்படுத்துவது. ஏன் அரசையே கூட கவிழ்ப்பது. இது இந்தியாவிற்கு கைவந்த கலை. இதனால் இந்தியா விரைவில் அது போன்ற தாக்குதல்களையும் கூட தொடங்கும்.

Exit mobile version