உலக நாடுகளை திரும்ப செய்த அறிவிப்பு ! வல்லரசு நாடாக மாறும் இந்தியா!

உலக நாடுகள் அனைத்தையும் கொரா னா அடித்து துவைத்து தொங்கப் போட்டுவரும் நிலையில் இந்தியா கொரானாவிற்கு பிந்தைய பொருளாதார மேம்பாட்டிற்காக 20 லட்சம் கோடியை அறிவித்து உலகின் அடுத்த வல்லரசு நாங்கள் தான் என்று அறிவித்து இருக்கிறது.

மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டத்தின் முக்கிய அம்சம் சுய சார்பு பொருளா தார மேம்பாடு. இந்த சுய சார்பு பொருளா தார மேம்பாடு உருவாக வேண்டும் என்றால் இந்தியாவில் உற்பத்தி அதிகரி த்து ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும்.

உள்நாட்டு நிறுவனங்கள் பன்னாட்டு நிறு வனங்களாக மாற வேண்டும் இதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்றால் நிச்சய மாக இருக்கிறது.இப்பொழுது உலக பொருளாதாரத்தை தீர்மானித்து வரும் சீனாவின் சப்ளை செயின் உடைந்து கொண்டு இருக்கிற து .இனி அது இந்தியாவில் இருந்தே உருவாக இருக்கிறது.இந்த சப்ளை செயின் தான் ஒரு நாட்டின் தொழில் உற்பத்தியை தீர்மானிக்கிறது ஒரு தொழில் நிறுவனம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்றால் அதன் சப்ளை செயின் சரியாக இயங்க வேண்டும்.

இதில் ஏதாவது ஒன்று அறுந்து விட்டால் கூட அந்த தொழில் நிறுவனம் அவ்வளவுதான். ஒரு தொழில் சரியாக இயங்க வேண்டும் என்றால் தொழிலுக்கு தேவை யான மூலப்பொருட்கள் சரியான இடத்தி ல் இருந்து வர வேண்டும்.அந்த மூலப்பொருட்கள் சரியான நேரத்தி ல் கிடைக்குமாறு சரியான போக்குவரத் து வசதி இருக்க வேண்டும்.இப்படி சரியான நேரத்தில் கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து உற்பத்தி யை இயக்க சரியான தொழிலாளர்கள் இருக்க வேண்டு ம்.

இப்படி உருவான பொருட்களை சரியான விற்பனையாளர்களிடம் கொண்டு செ ல்ல சரியான முகவர்கள் இருக்க வேண்டு ம்.இந்த விற்பனையார்கள் தான் நுகர் வோர்களிடம் எங்கோ உற்பத்தியாகும்பொருட்களை கொண்டு சேர்க்கிறார்கள்.

இந்த சப்ளை செயின் எங்காவது ஒரு இடத்தில் அறுந்து விட்டால் அந்த நிறுவன ம்
காலி தான்.சீனாவின் சப்ளை செயின் கடந்த வருடம் வரை மிக அற்புதமாக இயங்கி வந்தது. ஜப்பான் தென் கொரியா நாடுகளில் இரு ந்து வரும் சரியான மூலப்பொருட்களை வைத்து சீனாவில்உள்ள தொழிலாளர்க ள் பல்வேறு பொருட்களாக சரியான இட த்தில் வைத்து சரியான நேரத்தில் உரு வாக்கி வந்தார்கள்.
.
இப்படி உற்பத்தி யாகும் பொருட்களைஅமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மன் இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் சரியான முகவர்களாக இருந்து உலக நாடுகளிடம் தங்களின் பெயர் தாங்கி நுகர்வோர்களிடம் சேர்த்து வந்தார்கள்.ஆக உலக வர்த்தககத்தின் சப்ளை செயி ன் சீனாவை சுற்றியே இது வரை இருந்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு அமெக்கா சீனாவுடன் வர்த்தக போரை ஆரம்பித்து சப்ளை செயினின் விற்பனை என்கிற முக்கிய வளையத்தை அறுக்க ஆரம்பி த்தது.

அடுத்து கொரானா வைரசை உருவாக்கியதால் உற்பத்தி மையங்கள் மூடப்பட்டன இதனால் தொழிலாளர்கள் வேலை இ ந்தார்கள்.ஆக உற்பத்தி என்கிற சப்ளை செயினின் அடிப்படை வளையமும் துருப்பிடிக்க ஆரம்பித்தது இதனால் சீனாவுக்கு மூலப்பொருட்களை அளிக்கும் சப்ளை செயினின் முதல் வளையங்களான ஜப்பான் தென்கொரியாநாடுகள் மாற்று ஏற்பாட்டை தேட ஆரம்ப த்தன

இந்த நேரத்தில் தான் இந்தியாவின் ச ப்ளை செயினை உருவாக்கி வரும் மே னேஜர் மோடி சீனாவில் சப்ளை வளைய த்தில் இருக்கும் நாடுகளின் கண்ணில் தெரிய ஆரம்பித்தார். இந்தியாவின் சப்ளை செயினை மோடி நவீன உள்கட்ட மைப்பு மூலமாக உருவாக்கி வருவதை அறிந்த நாடுகள் சீனாவில் இருந்து சப்ளை செயினை உடைக்க விரும்புகின்றன்.

இதில் முக்கியமான விசயம் என்னவெ னில் சீனாவின் சப்ளை செயினுடன் இணைந்து இருக்கும் நாடுகள் அனைத்து ம் சீனாவின் கொள்கைக்கு மாறான கொள்கையை உடைய நாடுகள் .இருந்தாலும் மாற்று வழி இல்லாததால் சீனாவின்சப்ளை செயினில் இணைந்து இருந்தார்கள்.

ஆனால் கொரானா வந்த பிறகு சீனாவி ன்சப்ளை செயினை உடைக்கவே அனை த்து நாடுகளும் விரும்புகின்றன்.இந்த நிலையில் அவர்களுடைய தேர்வு அமெரி க்கா ஜப்பான் தென்கொரியா போன்ற நாடுகளிடம் இணங்கி இருக்கும் இந்தியாதானே இருக்க முடியும்.

சரியான தலைமை குழப்பங்கள் இல்லாத ஆட்சி .இது இரண்டும் தான் ஒரு நாட்டை தொழில் வளர்ச்சி உடைய நாடாக உருவாக்க முடியும். இது இரண்டும் இந்தியாவிற்கு மோடி ரூபத்தில்கிடைத்து இருக்கிறது.

இதனால் தான்சீனாவின் சப்ளை செயின் அறுந்து இந்தியாவில் விழுந்து இருக்கிறது. இந்த சப்ளை செயினை இந்தியா தலைமையில் உலக நாடுகளை இணைக்கவே மோடி 20 லட்சம் கோடிகளை அறிவித்து இருக்கிறார்.
.
இனி உலகப் பொருளாதாரத்தை தீர்மா னிக்க இந்தியாவில் இருந்து உருவாகும் சப்ளை செயினில் சீனாவும் ஒரு வளையமாக இருக்க முடியுமே தவிர சீனாவின் சப்ளை செயினில் இந்தியா இருக்க முடியாது. ஏனென்றால் இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு.

எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி

Exit mobile version