உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனவால் உலகமே அச்சத்தில் உள்ளது. இதன் காணமாக உலகம் முழுவதும் பலவேறு நாடுகளில் ஊரடங்கு போடப்பப்ட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகின்றது. இந்த நிலையில் கொரோனா தொடங்கிய காலத்தில் மே மாதத்தின் மத்தியில் இந்தியாவில் ஐந்து லட்சத்தை 35,000 கொரோனா நோயாளிகள் இருப்பார்கள். 38 ஆயிரத்து 620 இறப்புகள் நிகழ்ந்திருக்கும் என்று விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து ஆங்கில ஊடகங்கள் எழுதியிருந்தன. ஏப்ரல் 14 ல் முதல் ஊரடங்கு முடிவுற்று இரண்டாவது ஊரடங்கு நடக்கத் துவங்கி ஒரு வாரத்திற்கு பிறகு இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.
ஆனால் உண்மை என்ன? இன்று மே மாதத்தின் மத்தியில் நாம் இருக்கிறோம். இறப்பு கணிப்பில் இந்த ஆய்வு 93% தவறாகவும் நோயாளிகளின் எண்ணிக்கையில் 87வது சதவீதம் தவறாகவும் போயிருக்கிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கொத்துக் கொத்தாக செத்து வீழ்ந்தனர். சீனா தனது எண்ணிக்கையை மறைத்தது.
இவ்வளவு தெரிந்தும் ஊரடங்கினால் எந்த நல்லதும் ஏற்படவில்லை என மோடி வெறுப்பை உமிழ்ந்து எழுதும் மூத்த பத்திரிகையாளர் சாணாகாண போன்றவர்கள் மோடியால் நாடு பிழைத்தது என்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதற்கு கொஞ்சம் பரந்த மனது வேண்டும். மோடி வெறுப்பு என்ற மனோ வியாதிக்கு எந்தத் தீர்வும் கிடையாது. அவர்கள் மீது பரிதாப படலாம். அதுதான் நம்மால் செய்ய முடியும்!