உலகின் குருவாக இந்தியா! மோடியின் அரசால்!

oredesam

oredesam news

அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட வளர்ச்சி பெற்ற பணக்கார நாடுகளால் கூட கொரானாவை கட்டுப்படுத்த இயலவில்லை..இந்தியா எப்படி தப்பிக்கும்.. இந்தியா குண்டூசி கூட தயாரிக்க முடியாது தடுப்பூசி எங்கே தயாரிக்கும்..?

இந்திய மக்கள் தொகைக்கு தடுப்பூசி போடுவது என்பதெல்லாம் கிட்டத்தட்ட இயலாத காரியம்..
தடுப்பூசி இறக்குமதிக்காக இந்தியா மிகப்பெரும் அந்நிய செலாவணி இழப்பை சந்திக்கும்..

இந்தியாவில் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் குறைவு.. ஆகவே இந்தியா இந்த கொரோனாவுடன் அழிந்துபோகும்..

இந்திய பொருளாதாரம் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்திக்கும்.. பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும்.. ரஷ்யா துண்டு துண்டாக உடைந்தது போல இந்தியாவும் இருபத்திநான்கு நாடுகளாக உடைந்து போகும்.. இதிலிருந்து இந்தியா மீளவே முடியாது..

BSNLலை மோடிஅரசு விற்கப்போகிறதா அதற்க்கு இவர்தான்  காரணம் அண்ணாமலை ANNAMALAI BJP

இந்தியா என்ற ஒரு நாடே இனி இருக்காது.. இப்படித்தான் சர்வதேச ஊடகங்கள் (குறிப்பாக பாரதத்தை சிதைக்க வேண்டும் என்ற மிஷனரி, கம்யூனிச, வாகாபிய சித்தாந்தம் கொண்ட பத்திரிகைகள்) எழுதி தள்ளிக் கொண்டிருந்தன….

நாட்டுக்குள் இருக்கும் தேச விரோதிகள் இது நடக்க வேண்டும் என்று கொக்கரித்து கொண்டிருந்தனர்..
இந்தியா வீழ வேண்டும், அதை எள்ளி நகையாட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தது இந்த உள்நாட்டு தேசத்துரோகக் கூட்டம்..

*ஆனால் என்ன நடந்துள்ளது..65 கோடி தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு போட்டுள்ளது மோடியின் அரசு.. அத்தனை தடுப்பூசிகளும் இலவசமாக மாநில அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது மோடியின் அரசு.

ஒரு தடுப்பூசிக்கு 500 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட இதுவே முப்பதாயிரம் கோடியை எட்டிவிடும்)..
பல லட்சம் கோடிகளில் மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மூலமாக இலவச மருத்துவ உதவிகள் இன்று வரை செய்து வருகிறது மோடியின் மத்திய அரசு..

80 கோடி மக்களுக்கு கடந்த ஜூலை முதல் வருகின்ற நவம்பர் தீபாவளி வரை ஐந்து மாதங்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறது மோடியின் அரசு..

இப்போது கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி படு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.. இதுவரை 10 சதவீதம் என்ற உச்சத்தில் இருந்த ஜிடிபி இந்த முதல் காலாண்டில் ஜி.டி.பி. 20.1 சதவீத வளர்ச்சியில் சென்றுள்ளது !!!!*

இது இந்த வளர்ச்சி எந்த உலக நாடுகளிலும் இல்லாத சரித்திர சாதனை.. நல்லவன் நாடாண்டால் அனைத்தும் சாத்தியமே.. !!!!*அந்த நல்லவன், வல்லவன் கூடிய விரைவில், இந்தியாவை நல்லரசாக மட்டுமில்லாமல் வல்லரசாகவும் மாற்றி அமைப்பான்..

அதனால் இந்தியாவின் வளர்ச்சியை எந்த தேச விரோத சக்திகளாலும் தடுத்து விட இயலாது.. இந்தியா ஆன்மீக சக்திகளால் உருவாக்கம் செய்யப்பட்டது என்பதை மீண்டும் உலகம் உணரத் தொடங்கியுள்ளது..
உலகின் குருவாக இந்தியா உயர்ந்து நிற்கிறது…

Exit mobile version