சீனாவிடம் இருந்து நிறுவனங்களை திரும்ப பெற்றது ஜப்பான்! இந்தியாவுடன் கை கோர்க்கும் ஜப்பான்!

கொரானா பாதிப்பு இன்னும் முடியவில்லை ஆனால் மோடி கொரானாவுக்கு பிறகு செய்ய வேண்டிய வேலைகளை இப்பொழுதே ஆரம்பித்து விட்டார்.நேற்று தான் ஜப்பான் சீனாவில் இருந்து தன்னுடைய நிறுவனங்களை எல்லாம் திரும்ப அழைத்துக் கொண்டு அந்த நிறுவனங்களின் மறு சீரமைப்பு க்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி இருக்கிறது.

அதாவது சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயை சீனாவில் உள்ள ஜப்பான் நிறுவனங்களை இடமாற்றம் செய்வதற்கு மட்டுமே ஜப்பான் ஒதுக்கி இருக்கிறது. சீனாவில் மட்டும் ஜப்பானை சேர்ந்த 13ஆயிரத்து 700 தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.ஜப்பான் இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் இந்திய பிரத மர் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேயுட ன் மோடி தொலைபேசியில் பேசி இருக்கிறார்

மோடியின் பேச்சு கொரானா தடுப்பு பற்றி என்றாலும் அதையும் தாண்டி கொரானா முடிந்த பிறகு புதிய தொழில் நுட்பத்துடன் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செய ல் படுவதை பற்றியே பேசப்பட்டதாக மோடி தன்னுடைய ட்விட்டரில் கூறி இருக்கிறார். சீனாவின் வீழ்ச்சிக்காக காத்து இருந்த இந்தியா அதை சரியாக பயன்படுத்திகொள்ள முனைகிறது என்றே தெரிகிறது ஜப்பானும் இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு என்பதாலும் மோடிக்கும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேயுக்கும் இடையில் மிக நெருக்கமான நட்பு இருப்ப தால் சீனாவில் இருந்து விலக்கி வரும் தொழில்சாலைகளை இந்தியாவில் அமையவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் இது வரை 1,441 ஜப்பானிய நிறுவனங்கள் இருக்கின்றன. மோடி இந்திய பிரதமராக வந்த பிறகு சீனாவில் இருந்த ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை 14,400 ல் இருந்து 13,700 ஆக குறைந்து இருக்கிறது.

அதே நேரத்தில் இந்தியாவில் 2014 க்கு பிறகுசுமார் 400 ஜப்பானிய நிறுவன ங்கள் இந்தியாவில் நுழைந்து இருக்கி ன்றன.எனவே சீனாவில் இருந்து காலியாகும் ஜப்பானிய நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியாவில் இடம் பெறவே வாய்ப்புகள் உள்ளது சீனாவில் இருந்து ஐப்பானிய நிறுவன ங்கள் வெளியேறும் பொழுது சீனாவில் பல லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படும். அதே நேரத்தில் இந்தியாவுக்குஜப்பான் நிறுவனங்கள் வரும் பொழுது இந்தியாவில் பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

ஒருத்தருடைய வீழ்ச்சியில் தான் இன்னொருவருக்கு வளர்ச்சியே ஆரம்பி க்கும் இது தான் இயற்கையின் நியதி.இதற்காகவே மோடி காத்து இருக்கிறார் ஜப்பானும் இந்தியாவுடன் கை கோர்க்கவே விரும்புகிறது.

எழுத்தாளர்: விஜயகுமார் அருணகிரி

Exit mobile version