இந்திய விமான நிலையங்கள் ஆணையகத்தின் தாராளமயமாக்கப்பட்ட பறக்கும் பயிற்சி நிறுவன கொள்கையின் கீழ் இந்தியாவில் புதிதாக 8 பறக்கும் விமான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. பெலாகவி, ஜல்காவோன், கலபுரகி, கஜுராஹோ மற்றும் லீலாபாரியில் இந்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தியாவை சர்வதேச பறக்கும் பயிற்சி முனையமாக உருவாக்கவும், இந்திய வீரர்கள் வெளிநாட்டு மையங்களில் பயிற்சி மேற்கொள்வதைத் தடுக்கவும் இந்த எட்டு மையங்கள் நிறுவப்படுகின்றன . மேலும் இந்தியாவின் அண்டை நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் பயிற்சி தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த மையங்கள் வடிவமைக்கப்படும்.
கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போதும் இதற்கான ஏல நடைமுறையை இந்திய விமான நிலையங்கள் ஆணையகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
வானிலை மாற்றங்கள் மற்றும் பொது/ராணுவ விமான போக்குவரத்தால் இந்த 5 விமான நிலையங்களில் குறைந்த அளவிலான இடர்பாடுகளே ஏற்படுவதால் பறக்கும் விமான பயிற்சி மையங்களை இங்கு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் பறக்கும் பயிற்சித் துறை, தன்னிறைவை அடைவதற்கு இந்த முன்முயற்சி உதவிகரமாக இருக்கும்.
இதற்கான ஏல விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. ஏலத்தில் வெற்றி பெற்ற ஏசியா-பசிபிக், ஜெட்செர்வ், ரெட்பெர்ட், சம்வார்தனே, ஸ்கைநெக்ஸ் ஆகியவற்றிற்கு மே 31-ஆம் தேதி தேர்வு கடிதங்கள் அனுப்பப்பட்டன. விமான பாதுகாப்பு அம்சங்கள், கட்டுப்பாட்டு இயக்க முறைகள், மனிதர்களால் இயக்கப்படும் விமானங்களில் பைலட்டுகளுக்கு பயிற்சி அளிப்பதில் அனுபவம், உபகரணங்கள், பயிற்சியாளர்களின் இருப்பு போன்றவற்றின் அடிப்படையில் ஏலதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















