சீனாவுடனான இரயில்வே ஒப்பந்தம் ரத்து! இந்தியன் ரயில்வே அதிரடி !

எல்லைப்பகுதியில் இந்திய சீன வீரர்க ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.பல சீன வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய வீரர்கள் தரப்பிலும் 20 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளார்கள் மேலும் 4 ராணுவ வீரர்கள் சிகிச்சை பெற்று வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆக இப்பொழுது தான் எல்லை பஞ்சாயத்து சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது.சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளியேறும் பொழுது கோபத்துடன் இந்திய வீரர்கள் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தியதாகவும் பதிலுக்கு இந்திய வீரர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் உத்திர பிரதேசத்தில் சரக்கு ரயில் போக்குவரத்துக்கான வழித்தடத்தில் தொலைத்தொடா்பு வசதிகளை அமைப்பதற்காக சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.

சீன நிறுவனம் உரிய கால அளவில் திட்டப் பணியை முடிக்காமல் அந்த நிறுவனம் தாமதப்படுத்தி வருவதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுவதாக இந்தியன் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், கிழக்கு லடாக்கில் இந்திய-சீன ராணுவங்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் கொல்லப்பட்டதையடுத்து நாட்டில் சீன எதிா்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்தியன் ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: உத்திர பிரதேசத்தில் கான்பூா்-முகல்சராய் இடையே சரக்கு ரயில் போக்குவரத்துக்கான 417 கி.மீ. நீள பிரத்யேக வழித்தடத்தில் சமிக்ஞைகள் மற்றும் தொலைத்தொடா்பு வசதிகளை அமைப்பதற்கான ரூ.471 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் சீனாவைச் சோ்ந்த பெய்ஜிங் தேசிய ரயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு நிறுவனத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

ஒப்பந்தப்படி அந்த திட்டப் பணிகள் கடந்த ஆண்டிலேயே நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை 20 சதவீத பணிகளையே அந்த நிறுவனம் நிறைவு செய்துள்ளது. திட்டப் பணிகளை உரிய நேரத்தில் நிறைவு செய்யாததால் பெய்ஜிங் நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதென ரயில்வேயின் சரக்கு வழித்தட நிா்வாகத்துக்கான பிரத்யேக நிறுவனம் (டிஎஃப்சிசிஐஎல்) முடிவு செய்துள்ளது.

இந்த குறிப்பிட்ட திட்டத்துக்கான நிதியை டிஎஃப்சிசிஐஎல் நிறுவனத்துக்கு உலக வங்கி வழங்கியுள்ளது. எனவே, திட்டம் தொடா்பான ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடா்பாக அந்த வங்கியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகளை தாமதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க வேண்டிய தொழில்நுட்பம் தொடா்பான ஆவணங்களையும் அந்த சீன நிறுவனம் வழங்க மறுத்து வருகிறது.

திட்டப் பணிகள் நடைபெறும் இடத்தில் பொறியாளா்களையோ, உரிய அதிகாரிகளையோ அந்த நிறுவனம் பணியில் ஈடுபடுத்தவில்லை என்பது தீவிரமான விவகாரமாகும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினா்.

Exit mobile version