Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பொருளாதார போரை தொடங்கிய இந்தியா… யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்த இந்தியா..அட பாவமே நிலையில் பாகிஸ்தான்!

Oredesam by Oredesam
May 4, 2025
in இந்தியா, செய்திகள்
0
Pakistan

Pakistan

FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதுதவிர, விசா ரத்து, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார்.

பயங்கரவாத தாக்குதல் நடத்திய நம் அண்டை நாடான பாகிஸ்தான் மீது, பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்கும் தாக்குதலை மத்திய அரசு தொடர்கிறது. அந்த நாட்டில் இருந்து அனைத்து வகை இறக்குமதிக்கும் தடை, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கு அனுமதி மறுப்பு, தபால் மற்றும் பார்சல்களுக்கு அனுமதி இல்லை என, மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.. இதைத் தொடர்ந்து, அந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

அதே நேரத்தில், பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நோக்கிலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, துாதரக உறவு துண்டிப்பு, விசா மறுப்பு என, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு, மேலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், ஒரே நாளில் மூன்று அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

இறக்குமதிக்கு தடை
இதன்படி, அந்த நாட்டில் இருந்து எந்த ஒரு இறக்குமதிக்கும், அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தாலும் அனுமதி மறுப்பதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று அறிவித்தது.ஏற்கனவே, 2019ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 200 சதவீத வரியை மத்திய அரசு நிர்ணயித்தது. இதனால், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஏற்கனவே மிக மிக குறைந்த அளவே இருந்தது.அதுவும், உலர் பழங்கள், ஹிமாலயன் உப்பு போன்ற ஒரு சில பொருட்கள் மட்டுமே, அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தன

அதே நேரத்தில் நம் நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கான ஏற்றுமதி தொடர்ந்தது. கடந்த 2024 – 25 நிதியாண்டில் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 3,786 கோடி ரூபாய். அதே நேரத்தில் இறக்குமதி 3.55 கோடி ரூபாய்.இதன்படி பார்க்கையில், பாகிஸ்தானின் பொருட்களை சார்ந்து நம் நாடு இல்லை. ஆனால், இந்திய பொருட்களை பாகிஸ்தான் பெரிதும் நம்பியிருந்தது. அதனால், அரசின் இந்த புதிய அறிவிப்பால், நமக்கு பெரிய பொருளாதார பாதிப்பு இருக்காது. ஆனால், பாகிஸ்தானுக்கு பெரிய அடியாக இருக்கும்.

செல்ல வேண்டாம்
பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடியை, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கொடுத்துள்ளது.பாகிஸ்தான் கொடியுடன் கூடிய எந்த ஒரு வணிக கப்பல்களும், இந்தியாவில் உள்ள எந்த ஒரு துறைமுகத்துக்குள்ளும் நுழைய உடனடி தடை விதித்து, அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதுபோல, நம் தேசிய கொடியுடன் கூடிய எந்த ஒரு கப்பல்களும், பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

பார்சல் அனுப்ப முடியாது
நாட்டின் பாதுகாப்பு கருதி, பாகிஸ்தானில் இருந்து, தபால் அல்லது பார்சல்கள் நம் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்து, மத்திய தொலைதொடர்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஆகாயம், சாலை என, எந்த மார்க்கத்திலும், பாகிஸ்தானில் இருந்து தபால்கள் மற்றும் பார்சல்களை ஏற்க மாட்டோம் என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதுபோல, இங்கிருந்தும், பாகிஸ்தானுக்கு பார்சல்களை அனுப்ப முடியாது.நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த தடை உத்தரவுகள் அமலில் இருக்கும் என, மூன்று அமைச்சகங்களும் தெரிவித்துள்ளன.

மேலும் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் இல்லாம ராணுவமே பயிற்சி செய்ய முடியாமல் திண்டாடும் நிலை! உருவாகியுள்ளது இதைவிட பெரிய வேடிக்கை வேறென்ன இருக்க முடியும்? மோசமான பொருளாதாரம், லாஜிஸ்டிக்ஸ் சிக்கல் என திண்டாடும் பாகிஸ்தானால் ஒரு நீண்டகால போர்னா எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடியும்னு யோசிச்சுப் பாருங்க!

போர்னா சும்மாவா? செலவு ஒருபக்கம்… வெடிமருந்து கையிருப்பு இன்னொரு பக்கம்! கார்கில் போர்லயே பாகிஸ்தானை விட இந்தியா பல மடங்கு அதிகம் செலவு செய்தது வரலாறு! இந்தியாவின் பொருளாதார வலிமை, அந்நியச் செலாவணி கையிருப்பு, தேவைப்பட்டால் கடன் வாங்கும் திறன் என எல்லாமே போர்க்கால செலவுகளை சமாளிக்க கைகொடுக்கும்! வெடிமருந்து கையிருப்பிலும் இந்தியா படு கெட்டியாக இருக்கிறது! நீண்டகால போர் நடந்தாலும் சமாளிக்கும் அளவுக்கு போதுமான கையிருப்பு இருக்குதாம்! அதிரடி ஆயுத உற்பத்தியிலும் இந்தியா சுயசார்பை நோக்கி வேகமாக நகர்வது இன்னும் பலம்! ஆயுதங்களை ஏற்றுமதியும் செய்கிறோம்!

ஆனால் பாகிஸ்தான்? பொருளாதாரக் கட்டுப்பாடு, லாஜிஸ்டிக்ஸ் சிக்கல் என திண்டாட்டம்! ஒரு நீண்டகால போர்னா இவங்களால நிக்கவே முடியாது!மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்றால்… இந்தியா இப்போது பழைய இந்தியா இல்லை! பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது! யார் வம்பு செய்தாலும், எங்கு பிரச்சனை செய்தாலும், அதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்! ராணுவ பலம், பொருளாதார வலிமை, தொழில்நுட்ப மேன்மை என எல்லா வகையிலும் இந்தியா பலம் வாய்ந்த நாடாக நிற்கிறது! பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பரிதாப நிலையை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது!

இனி இந்தியாவில் வம்பு செய்தால், பதிலடி பயங்கரமாக இருக்கும் என்பதுதான் டெல்லியில் இருந்து வரும் செய்தி!

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Narendra Modi

பராம்பரிய திறமைகளுக்கு சுதந்திர தினத்தில் சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி!..

August 15, 2023
NDA

தவிடுபொடியானது இண்டி கூட்டணி… மேலும் ஒரு கட்சி விலகல்… பா.ஜ.கவுடன் கூட்டணி..

February 10, 2024
சாத்தான் குளத்தில் இறந்தவர்களுக்கு 25 லட்சம் கொடுத்த திமுக இராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை?  ஏன்

சாத்தான் குளத்தில் இறந்தவர்களுக்கு 25 லட்சம் கொடுத்த திமுக இராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை? ஏன்

June 26, 2020
திருப்பூரில் பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை ! கொலைகளின் கூடாரமாகிறதா தமிழகம் !

திருப்பூரில் பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை ! கொலைகளின் கூடாரமாகிறதா தமிழகம் !

June 29, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x