இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில், சீன தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன் பின் உயர்மட்ட ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன வீரர்கள் பின்வாங்கி சென்றார்கள்.
கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 6 எல்லைகளில் அத்துமீற முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் 500 சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் சீன வீரர்களை அடித்து விரட்டியுள்ளார்கள் .
ஆகஸ்ட் 29-30 ஆம் தேதி இரவன்று இந்திய ராணுவவீரர்கள் சீனவசம் இருந்த உயரமான மலை சிகரங்களை கைப்பற்றியது. மேலும் அங்கிருந்த கேமராக்களை அகற்றியது அப்போது சீனப் படையினர் அந்த பகுதியிலிருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் மட்டும்தான் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையால் சீன என்ன செய்வது என்று புரியாமல் நிற்கிறது. சீனாவின் மீது எந்த நேரத்திலும் தாக்கல் நடத்தவும் இந்தியா தயாராக உள்ளது என அங்கிருக்கும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும் கிழக்கு லடாக் எல்லையில் உள்ள மேலும் ஒரு உயரமான சிகரத்தை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.லடாக் எல்லையில் சீனா 50 ஆயிரம் வீரர்களை குவித்துள்ள நிலையில் அதற்கு ஈடாக இந்தியாவும் 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் குவித்துள்ளது.இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் மிக உயரமான சிகரங்களை சீனாவிடமிருந்து மீட்டு மூவர்ணக் கொடியைப் பறக்க விட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சீன பீதியில் உள்ளது.
கடந்த ஏப்ரல் மே மாதங்களில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பகுதி இப்போது இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.இப்பகுதியில் இருந்து படைகளை பின்வாங்க சீனா மறுத்து வந்தது. பிரிகேடியர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.
தொலைத் தொடர்பு இணைப்பை தயார்நிலையில் வைத்திருப்பது என முடிவு செய்யப்பட்டபோதும், படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான முடிவு எட்டப்படவில்லை.