இந்தியாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்குடன் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டு குழுக்களை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய சதி செய்து வருவதாக புலனாய்வு அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகள் கெல், தேஜியன் மற்றும் சர்தாரி ஏவுதளங்களில் பணியில் உள்ள 50 பயங்கரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதிகளை (Terrorists) எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் நேரம் பார்த்து காத்திருக்கிறது. பாகிஸ்தான்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள மச்சில் செக்டாரில் ஏராளமான பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர். இருப்பினும், எச்சரிக்கையுடன் இருந்த இந்திய இராணுவமும், எல்லை பாதுகாப்பு படையும் பயங்கரவாத சதியை முறியடித்தது. அப்போது ஏற்பட்ட ஒரு மோதலின் போது குறைந்தது மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுபாட்டு கோடு வழியாக மச்சில் செக்டாரில் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது.இந்த மோதலில் காயமடைந்த இரண்டு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
நவம்பர் 7-8 தேதிகளில் மச்சில் செக்டரில் ரோந்து பணி மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத நபர்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் கண்டறியப்பட்டதாகவும், இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் போது பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் இந்திய ராணுவம் (Indian Army) தெரிவித்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.