ஆபரேஷன் வைப் அவுட் ஒரு வாரத்தில் 20 தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம்!

கடந்த சில நாட்களாக எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறுவதும் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்துவதும் அதிகமாக இருக்கின்றது. பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று 10 ராணுவ முகாம்களை அழித்தது இந்திய ராணுவம், இதனால் பாகிஸ்தான் சில நாட்களாக அடங்கியுள்ளது. தீவிரவாதிகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தின்சுகியா என்ற பகுதியில் காஷ்மீர் காவல்துறை மற்றும் ராணுவத்தினரும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாயிதீன் இயக்கத் தீவிரவாதிகள் பதுங்கிய வீட்டைச் சுற்றி இன்று காலை அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதில் கடும் துபபாக்கிச் சண்டை மூண்டது.

இந்த சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் ஏராளமான படைவீரர்கள் குவிக்கப்பட்டு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.ஆபரேஷன் வைப் அவுட் என்ற பெயரில் கடந்த ஒருவாரத்தில் சுமார் 20 தீவிரவாதிகளை ராணுவம் ஒழித்துக் கட்டியுள்ளது.

Exit mobile version