குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி படுகாயம் அடைந்து, கவலைக்கிடம் 11 உயிரிழப்பு ?

நீலகிரி: குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குளானது. பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. ராணுவ உயர் அதிகாரி வந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் நான்கு பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூலூர் விமானப்படை மைதானத்தில் இருந்து வெலிங்டன் சென்ற போது ஹெலிகாப்படர் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் விரைந்துள்ளார். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகளுக்காக தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் விரைந்துள்ளனர். இதனிடையே விபத்துக்குள்ளான  ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத்தும் பயணித்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத் இருந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்திய விமானப்படை.இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ணுவ ஹெலிகாப்டர் விபத்தில், பிபின் ராவத் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்

ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி எனத் தகவல்

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு எனத் தகவல்

ஹெலிகாப்டரில் 2 விமானிகள், 9 ராணுவ கமாண்டோ வீரர்கள் இருந்ததாக தகவல்

பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர்

ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் படுகாயம் அடைந்து, கவலைக்கிடம் எனத் தகவல்

Exit mobile version