இந்திய அரசு ஒரு அதிரடி முடிவினை எடுக்க இருக்கின்றது

ஆம் இந்தியாவில் எவ்வளவோ திறமைகள் இருந்தும் ரபேல் முதல் நீர்மூழ்கி வரை அந்நிய நாட்டிடம் கையேந்த வேண்டியது ஏன்?

நம்மால் உருவாக்க முடியாதா? முடியும் ஆனால் தடுப்பது எது தெரியுமா? நம் நாட்டின் சட்டங்கள்

இந்தியா எக்காலமும் ஆயுத இறக்குமதிக்கு வெளிநாட்டையே நம்பி இருக்கும் அளவு இங்கு சட்டங்களில் ஏக கெடுபிடி, அதாவது விஷயத்தை இப்படி சொல்லலாம்

அமெரிக்காவில் 50க்கும் மேற்பட்ட தனியார் ஆயுத தொழிற்சாலைகள் உண்டு, ரஷ்யாவில் 35க்கு மேல் உண்டு

இவைகளின் முழுநேர பணி நவீன ஆயுதங்களை தயாரித்து அரசுக்கு கொடுக்கும், அரசு அனுமதிக்கும் பட்சத்தில் தங்கள் நாட்டைவிட சக்தி குறைந்த ஆயுதங்களை அந்நிய நாடுகளுக்கு விற்கும், இதில் அரசுக்கு கணிசமான பங்கும் நிறுவணங்கள் அடுத்த ஆராய்ச்சிக்கு செல்ல குறிப்பிட்ட பங்கும் வழங்கபடும்

சுருக்கமாக சொன்னால் தனியார் நிறுவணங்கள் அரசின் இரும்பு கரங்களுக்குள் உழைக்கும், அவை எதையும் உருவாக்கலாம் ஆனால் விற்பனை முடிவு அரசிடம் இருக்கும்

இந்தியாவில் சட்டம் எப்படி தெரியுமா? ஆயுதங்களை அரசு நிறுவணங்களே தயாரிக்கும் அரசு எவ்வளவு நிதி ஒதுக்குமோ அதில் தயாரித்தால் போதும்

தனியாருக்கு அரசு அனுமதி கொடுக்காது , தேவைபட்டால் வெளிநாட்டில் வாங்கும்.

இந்த யழவு சட்டம் நேரு காலத்தில் இருந்தது, சாஸ்திரி இதில் கைவைத்துவிட்டால் தன் வியாபாரம் செத்துவிடும் என அஞ்சிய ரஷ்யாவில் அவர் இறந்தார், பின் இந்திரா அஞ்சினார்

ஒரு பயலும் இந்த சட்டத்தை திருத்த துணியவில்லை தொட்டால் உலக நாடுகளின் மிரட்டலுக்கு ஆளாவோம் எனும் அச்சம் இருந்தது

மோடி தன் முதலாம் ஆட்சியில் இதை பாதி திருத்தினார், அதாவது மேக் இன் இந்தியா என மெதுவாக அழைத்தார்

மெல்ல விதிகளை தளர்த்தி வெளிநாட்டு ஆயுத நிறுவணங்களுடன் உள்நாட்டு நிறுவணங்கள் இணைந்து தயாரிக்க வழி செய்தார்

இப்பொழுது ராஜ்நாத் சிங் அடித்து சொல்கின்றார், இனி விதிகள் தளர்த்தபட்டு இந்திய அரசின் மேற்பார்வையில் இந்தியாவே முழு நவீன ஆயுதங்களையும் செய்யும்

ஆம், ஒவ்வொரு இந்தியனும் கைதட்ட வேண்டிய நேரமிது

நம்மிடம் என்ன இல்லை, எல்லா அறிவும் வளமும் செயற்கை கோள் முதல் கணிணிவரை நிரம்பியிருக்கும் பொழுது நாமே செய்யலாம்

2025ல் இந்தியா ஆயுத ஏற்றுமதி செய்யும் இலக்கினை எட்ட இது உதவும் விரைவில் சட்டம் திருத்தபடும்

இதனால் உள்ளூரில் பெரும் கம்பெனிகள் தோன்றும், இந்திய பணம் இந்தியாவுக்குள்ளே சுற்றும்

சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்தே நம் கைகளை கட்டிபோட்ட சட்டங்களை திருத்துகின்றார் மோடி, வாழ்த்துக்கள்

இப்பொழுதும் இது அம்பானி, அதானி சம்பாதிக்க செய்யும் வழி என சிலர் கிளம்புவான்

ஆனால் எல்&டி, டாட்டா, டிவிஎஸ் உட்பட பல நிறுவணங்களும் இன்னும் ஏகபட்ட சிறு நிறுவணங்களும் இதில் உண்டு என்பதை மறந்துவிடுவான்

சரி, ஆயுதங்களை உள்ளூரில் செய்யலாம் எனும் சட்டதிருத்தம் வந்தால் தமிழகத்தில் எத்தனை கம்பெனி தொடங்கபடும் என நினைக்கின்றீர்கள்?

ஐஐடி உண்டு, ஐந்தாயிரம் பொறியியல் கல்லூரி உண்டு என இதெல்லாம் திராவிட சாதனை என‌
அடிக்கடி வெற்று பிம்பம் காட்டும் வீரர்களிடம் இதற்கு பதில் உண்டா?

நிச்சயம் இல்லை

தமிழ்நாட்டில் டி.வி.எஸ் குழுமம் மட்டுமே ஓரளவு நிரப்பமுடியும், வேறு எந்த தொழில்குழுமும் அப்படி அல்ல‌

ஏன்?

தமிழனுக்கு டிவி தொடங்க வேண்டும், குத்தாட்டமும் ஆட்டமும் பாட்டமுமாக இருக்க வேண்டும், தீம் பார்க் தொடங்க வேண்டும், டாஸ்மாக் பார் வேண்டும்

கல்லூரி என கட்டம் கட்டி சம்பாதிக்க வேண்டும் ஆனால் விளைவுகள் பற்றி கவலையே படகூடாது, காரணம் இது ராம்சாமி திராவிட மண்

இத்தனை டிவி சானல்கள் உள்ள தமிழ்நாட்டில் ஒரு தனியார் கனரக தொழிற்சாலை உண்டு என கருதுக்கின்றீர்கள்? இதுதான் தமிழகம் திராவிட கட்சிகளால் சரிந்த கதை

இனியாவது அமெரிக்காவின் லாஹீன் மார்ட்டின், சுவிஸின் போபர்ஸ் போன்ற பெரும் நிறுவணங்கள் இந்தியாவில் தோன்றட்டும்

மோடி செய்ய போகும் சட்ட திருத்தம் எதை காட்டுகின்றது?

ஒரு காலத்தில் துணி வெள்ளையனிடம் இருந்து வந்தது, நாம் வாங்க வேண்டும். அவன் சொல்லும் கொள்ளை விலைக்கு வாங்க வேண்டும்

நாமே தயரிப்போம் என்றாலும் விடமாட்டான், மிஷின் தரமாட்டான். காந்தி கதர் உடுத்தி போராடினார்

பின்னாளில் சுதந்திர இந்தியாவில் நாமே செய்தோம் பாம்பே டையிங்கோ, கோவை மில்லோ, இல்லை அம்பானியோ எவனோ ஒரு இந்தியன் சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக செய்தான்

அதில்தான் இன்று சல்லி விலையில் வகை வகையாக உடுத்துகின்றோம்

ஆடை என்பது மனிதனின் மானத்தை மறைப்பது

ராணுவம் என்பது நாட்டின் கவுரவம் மானத்தை காப்பது, சுதந்திரம் பெற்றது முதல் இதுகாலம் வரை என் ராணுவ‌ ஆடையினை வாங்கி உன் நாட்டின் மானத்தை காப்பாற்று என நம்மை சுரண்டி கொண்டிருந்தது வெள்ளை உலகம்

மோடி எங்களுக்கான் ராணுவ தளவாட ஆடையினை நாங்களே செய்கின்றோம் என இரண்டாம் சுதந்திரத்தினை அறிவிக்கின்றார்,

இனி பல்லாயிரம் மில்லியன் பில்லியன் டாலர்கள் இந்தியாவுக்குள்ளே சுற்றும்

அந்த பல்லாயிரம் கோடிகளில் நாட்டு நலன் திட்டம், விவசாய திட்டம் என தேசம் வளம்பெறும்.

மோடி இந்தியாவின் மாபெரும் இரும்பு தலைவன் என உலகம் அமைதியாக ஒப்புகொள்கின்றது,

இந்தியாவின் உண்மையான புரட்சியாளர் மோடிதான்..

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version