பாரத பிரதமர் நரேந்திரமோடி அரசு முறைபயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் இதனை தொடர்ந்து பல்வேறு முக்கிய நபர்களை சந்தித்து வருகின்றார்.
மோடியிடம் பாடம் படித்த மார்க் விட்மர்-அமெரிக்கா சென்றுள்ள பாரத பிரதமர்வரிசையாக அமெரிக்காவின் டாப் டெக்னாலிஜிஸ்ட்களை சந்தித்து கொண்டுஇருக்கிறார். இதில் அமெரிக்காவின் சோலார் டெக் ஜெயன்ட் பர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் சிஇஓ மார்க் விட்மரைமோடி சந்தித்து தான் உலகின் டாப் நியூசாக இருக்கிறது.
உலகம் முழுவதும் சோலார் எனர்ஜியை முடுக்கி விட ஒரே உலகம் ஒரே சூரியன் ஒரே கிரிட் என்று மோடி மார்க் விட்மரிடம் கூற மார்க் விட்மர் மிரண்டு விட்டார். உலகம் முழுவதும் சோலார் எனர்ஜி பற்றிபாடம் எடுக்கும் சோலார் பர்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர்க்கு மோடி சோலார் எனர்ஜி பாடம் எடுத்து மிரட்டிவிட்டார்.
மோடியை சந்தித்த பிறகு மார்க் விட்மர் கூறியது என்னவென்றால் பருவநிலை மாற்றம் பற்றி மற்ற நாடுகள் வெறும் வாய்பேச்சுக்களில் மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்தியாவோ பருவநிலை மாற்றம் மற்ற நாடுகளுக்கு பாடம் எடுக்கும் நிலையில் இருக்கிறது என்றார்.ஏனென்றால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014ல் இருந்து 2021 வரை இந்தியா 250 மடங்கு ரினிவபல் எனர்ஜி மூலமாக மின்சாரம் உற்பத்தியை அதிகரித்து இருக்கிறது.
இன்று உலகளவில் இந்தியா ரினிவபல் எனர்ஜி உற்பத்தியில் 3வது இடத்தில் இருக்கிறது.இதில் சோலார் எனர்ஜி மூலமாக மின் உற்பத்தியை பார்த்தால் மிரண்டுவிடுவீர்கள்.மன்மோகன் சிங் ஆட்சியின் கடைசியில் அதாவது 2014 ஏப்ரலில் இந்தியாவில் சோலார் எனர்ஜி மூலமாக உருவான மின்சாரம் 3.36 டெராவாட் ஹவர் தான் ஆனால் இந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியா சோலார் எனர்ஜி மூலமாக 60.40 டெராவாட் ஹவர் மின்சாரத்தை உருவாக்கி இருக்கிறது.
இதற்கு என்ன காரணம் என்றால் மோடிக்கு சோலார் எனர்ஜி மீது இருக்கும் அதிகப் படியான ஆர்வமே காரணம் 2015 ல் இந்தியாவில் சோலார் எனர்ஜி மூலமாக மின்சாரம் உருவாக்கும் திறன் 5,593.484 மெகாவாட் அளவிலேயே இருந்தது. ஆனால் 2020ல் இந்தியாவில் சோலூர் எனர்ஜி மூலமாக 39, 211.158 மெகா வாட் மின்சாரத்தை உருவாக்கும் திறனை பெற்றுவிட்டோம்.பாருங்கள் 5 வருடங்களில் மோடி ஆட்சியில் இந்தியா 2015 ல் இருந்ததைவிட 7 மடங்கு அளவிற்கு சோலார் எனர்ஜி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் திற னை பெற்று இருக்கிறது.இதனால் தான் இந்தியா 2015 ல் சோலார்எனர்ஜி மூலமாக மின் உற்பத்தியில் உலக அரங்கில் 10 வது இடத்தில் இருந்து இப்பொழுது 5 வது இடத்திற்கு வந்து இருக்கிறது.
இன்னும் இரண்டே வருடங்களில்இந்தியா 4 வது இடத்தில் உள்ள ஜெர்மன்3 வது இடத்தில் உள்ள ஜப்பானை ஓவர்டேக் செய்து விடும்.இன்று உலகத்திலேயே சோலார் எனர்ஜிமூலமாக அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கும் பிளாண்ட் பத்லா சோலார் பார்க் தான். அதாவது 2245 மெகா வாட் மின்சாரம் உருவாக்கும் சோலார் பிளாண்டை ராஜஸ்தானில் நிறுவிமோடி உலகின் மிகப்பெரிய சோலார் பிளாண்ட் உள்ள நாடு என்கிற பெருமையை இந்தியாவுக் கு அளித்து இருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் கர்நாடகாவில் உள்ள பவகாடா சோலார் பார்க் உலகில்சோலார் எனர்ஜி மூலமாக மின் உற்பத்திசெய்யும் பிளாண்ட்களில் 3 வது இடத்தில்இருக்கிறது. இதனுடைய மின் உற்பத்திதிறன் 2050 மெகா வாட்.சோலார் எனர்ஜி மூலமாக மின் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்தை பிடித்து இருந்தாலும் அதனுடைய ஹெய்னன் சோலார் பார்க் 2200 மெகா வாட் மின் உற்பத்தி திறனுடன் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கர்நாடாகாவில் உள்ள பவகோடா சோலார் பார்க்கில் விரிவாக்கம் நடைபெற்று வருகிறது.இது முடிந்தவுடன் அது தான் சோலார் எனர்ஜி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் உலகின் நம்பர் 1 சோலார் பார்க் என்கிற பெருமையை பெற்றுவிடும். பெருகி வரும் இந்தியாவின் மின்சார தேவையை நிவர்த்தி செய்ய மோடி அரசு இந்தியாவில் பல சோலார் பார்க்குகளை உருவாக்கும் முன்பே குஜராத்தில் மோடி முதல்வராக இருக்கும் பொழுதே செயல்படுத்தி குஜராத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிவிட்டார்.
சோலார் எனர்ஜி உருவாக அடிப்படை கா ரணம் செயற்கை கோள்கள் தான். வானில் இடைவிடாமல் பறக்கிறதே செயற்கை கோள்கள் .அதற்கு மின்சாரம் வேண்டுமல்லவா..அதற்காக கண்டுபிடிக்கபட்டதே சோலார் எனர்ஜி.1958 ம் ஆண்டில் அமெரிக்கா அனுப்பிய வான்கார்ட் என்ற விண்கலத்தில் தான் சோலார் பேனல்கள் நிருவபட்டது. சாதரணமாக சூரிய ஒளி மூலம் ஒரு மெ காவாட் மின் சாரம் தயாரிக்க 4.5 ஏக்கர் நிலத்தில் சோலார் பேனல்களை நிறுவ வேண்டும்.
சூரியனிலிருந்து வரும் ஒளியினை மின் சக்தியாக மாற்ற போட்டோ வோல்டிக் செல்கள் எனப்படும் சிறிய பேட்டரிகளை இணைத்து சோலார் பேணல்களை உருவாக்க வேண்டும் இந்த செல்கள் தான் சூரியனிலிருந்து வரும் ஒளி எனர்ஜியை எலெக்ட்ரிக் எனர்ஜியாக மாற்றுகிறது.நாம் நினைக்கிற மாதிரி அனல் மின் நிலையம்,நீர்மின்நிலையம் அணு மின் நிலையம் மாதிரி சோலார் மின்சக்தியை பெரிய அளவில் உற்பத்தி செய்யமுடியாது.
காரணம்.இதனால் பெறப்படும் மின்சாரம் DC எனப்படும் டைரக்ட் கரண்ட் வகையை சார்ந்தது. இதைதான் தாமஸ் ஆல் வா எடிசன் கண்டுபிடித்தார். அதனால் இதை பேட்டரியில் சேமித்து வைத்து அதை வீட்டிற்கு தேவையான நிகோலஸ் டெஸ்லா கண்டுபிடித்த AC எனப்படும் அல்டெர்நெடிவ் கரண்டிற்கு மாற்ற இன்வேர்டர் பாட்டரி போன்றவை தேவைபடுவதால் சாமானியர்கள் சோலார் சிஸ்டம் என்றாலே தலை தெறிக்க ஓடுகிறார்கள்.சோலார் சிஸ்டத்தின் மிகப்பெரிய பலன் மின்சாரத்திற்காக நாம் அரசாங்கத்தை சார்ந்திராமல் நாம் நினைத்தால் நமக்கு தேவையான மின்சாரத்தை நம்முடைய வீட்டில் இருந்தே உருவாக்கி கொள்ள முடியும்..
அதற்கு அரசாங்கமும் மானியங்கள் தருகின்றது.இருந்தாலும் சோலார் எனர்ஜி மூலமாகமின்சாரம் தயாரிக்க உலகில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் துணைக்கு இருந்தால் சோலார் எனர்ஜியில்இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டுவர முடியும் அதற்கு தான் உலகின் நம்பர் 1 சோலார்மின் உற்பத்தி நிறுவனமான சோலார்பர்ஸ்ட் நிறுவனத்தின் சிஇஓவை அழைத்து மோடி இந்தியாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்து இருக்கிறார். பதிலுக்கு அவர் பருவநிலை மாற்றம் பற்றிபேசும் நாடுகள் இந்தியாவை பின்பற்றி செயல்படுங்கள் என்று கூறியிருக்கிறார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















