சீனாவை புறக்கணிக்கத் தொடங்கிய இந்தியர்கள்! 43% இந்தியர்கள், சீன பொருட்களை புறக்கணித்துள்ளனர்!

கடந்த 12 மாதங்களில் 43% இந்தியர்கள், சீன பொருட்களை புறக்கணித்துள்ளனர்!
லடாக்கில் (Ladakh) உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) இந்திய மற்றும் சீன படையினருக்கு இடையிலான மோதல் கடந்த ஆண்டு தொடங்கியது. அந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பல சாமானிய மக்கள், சீன தயாரிப்புகளை புறக்கணிக்க தொடங்கினர்.

அதே சமயத்தில் ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியர்கள், தற்சார்பு பொருளாதாரத்தை (Atmanirbhar Bharat) நோக்கிய பயணத்தை, ஊக்குவிக்கும் வகையில், இந்திய அரசு பல திட்டங்களை வகுத்தது. கூடுதலாக உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, இந்திய அரசாங்கம் 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்தது.

இதனால் கடந்த 12 மாதங்களில், 43% இந்தியர்கள் சீன பொருட்களை (Made in China) புறக்கணித்துள்ளனர். கிட்டத்தட்ட 60% பேர் சீனாவில் தயாரித்த பொருட்களை தொடர்ந்து வாங்குகின்றனர் ஆனால், அவர்கள் கூட இந்த காலகட்டத்தில் 1-4 பொருட்களே வாங்கியுள்ளனர்.இன்னும் சொல்லப்போனால், நுகர்வோரின் விழிப்புணர்வு (consumer awareness) இந்த ஓராண்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது!

மேலும் பட்டாசு என்றாலே சிவகாசிதான். நாடு முழுவதும் பட்டாசு சப்ளை செய்து உள்நாட்டின் மிகப்பெரிய வியாபாரத்துக்கு சீனாக்காரன் ஆப்பு வைத்து விடுவானோ என்று இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பீதி அடைந்தனர். காரணம், கடந்த சில ஆண்டுகளாக சீன பட்டாசுகள் இந்திய மார்கெட்டுக்குள் புகுந்து விளையாடியது. விலையும் குறைவு, வியாபாரிகளுக்கும் லாபம் அதிகம் கிடைப்பதால் சீன பட்டாசுகள் தங்கு தடையில்லாமல் புழங்கி வந்தது.

இந்த ஆண்டு அரசு சீன பட்டாசுகளுக்கு தடை விதித்தது. அப்படியிருந்தும் 1500 கண்டெய்னர்களில் சீன பட்டாசுகள் இந்தியா முழுவதற்கும் வந்துள்ளது.ஆனால் சீன பட்டாசுகளை வாங்குவதில்லை என்ற உணர்வு நம்மவர்களிடம் ஏற்பட்டுள்ளது. யாரும் விரும்பி வாங்கவுமில்லை.

Exit mobile version