இந்தியாவின் இஸ்ரோ அமெரிக்காவின் நாசா இணைந்து செயல்பட திட்டம்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 21-ல் ஐ.நா. தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்வு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

பின்னர் வாஷிங்டன் சென்ற பிரதமர்மோடி, வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் அளித்த விருந்தில் பங்கேற்றார். இதையடுத்து அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா’, இந்திய விண்வெளி அமைப்பான ‘இஸ்ரோ’ இணைந்து செயல்படுவது மற்றும் மற்றும் ஹெச்ஒன் பிவிசா விதிமுறைகள் தளர்வு தொடர்பான என ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.


வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தம் மூலம் நாசா- இஸ்ரோ இணைந்து விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்வது மற்றும் 2025ல் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது..

பிரதமரின் இந்த அமெரிக்க பயணத்தின் முக்கிய நிகழ்வாக, முதன்முறையாக , ஜோபைடனுடன் கூட்டாக பத்திரிகையாளர்களை மோடி சந்தித்து பேட்டி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 21-ல் ஐ.நா. தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்வு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version