ஐரோப்பிய ஒன்றியமானது 28 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஓர் கூட்டமைப்பு ஆகும். எல்லா ஐரோப்பிய ஒன்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பானது 27 நாடுகளின் உடன்படிக்கையையும் ரோம் உடன்படிக்கையையும் அடிப்படையாகக் கொண்டது. இது 5 நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படுகிறது. ஐரோப்பிய மன்றம், ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு, ஐரோப்பிய பாராளுமன்றம், ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய நீதிமன்றம். ஐரோப்பிய ஒன்றியத்தினை சேர்ந்த மக்கள் பயணம் செய்ய க்ரீன் பாஸ் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தியுள்ளது.
இதன்படி, ஐரோப்பிய ஒன்றியம் , உறுப்பு நாடுகள் அனுமதியளித்த தடுப்பூசிகளைச் செலுத்திய மக்கள் அளிக்கும் சான்றிதழ்(க்ரீன் பாஸ்) மட்டுமே ஏற்கப்படும். பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் வழங்கினாலும், அதை அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழாக ஏற்காமல், அவர்களை கட்டாயத் தனிமைக்கு உட்படுத்துப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனிடம் மத்திய அரசு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சினை உங்களது டிஜிட்டல் கோவிட் சான்றிதழில் சேர்த்தால் மற்றும் கோவின் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்தால், மட்டுமே பதிலுக்கு நாங்களும் ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழை அங்கீகரிப்போம். அதன் மூலம் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இந்திய சுகாதார அதிகாரிகள் பரஸ்பரம் விலக்கு அளிப்பார்கள்.” என கூறியுள்ளது.
இதன் பொருள் ‘எங்கள் சான்றிதழை ஏற்க மறுத்தால், உங்கள் சான்றிதழை நங்கள் ஏற்கமாட்டோம் ஏற்க என்பதாகும். அரசின் இந்த அறிவிப்பால் விரைவில் இந்திய தடுப்பூசி சான்றிதழை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கும் என வெளியுறவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் இந்த செயலுக்கு ஆப்பிரிக்க யூனியன் அமைப்பும் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவிலிருந்தும், குறைந்த வருமானம் உள்ள ஏழை நாடுகளில் இருந்தும் வரும் பயணிகள் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய நிலையிலும் அவர்களை ஏற்காதது சமத்துவமின்மை” எனத் தெரிவித்துள்ளது.