பாஜக vs திமுக ஐ.பி.எஸ். அதிகாரி தமிழக பா.ஜ.க தலைவர்! பெண்கள் இடுப்பு பற்றி பேசியவர் தமிழக பாடநூல் தலைவர்!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் நியமனம் அவரை பற்றி சிறு குறிப்பு ;
பெயர்: அண்ணாமலை குப்புசாமி கவுண்டர் பிறப்பு : கரூர் தந்தை: விவசாயி படிப்பு: B.E – கோவை PSG கல்லூரி MBA – IIM IPS – தேசிய அளவில் முதலிடம் ( 24 வது வயதில்) பதவிகள் : மாவட்ட கண்காணிப்பாளர் உடுப்பி, சிக்மங்களூர் பெங்களுரில் நகர துணை ஆணையர் கன்னட மக்கள் கொடுத்த பெயர். “சிங்கம் அண்ணாமலை”..

தமிழகத்தில் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, 2011-ம் ஆண்டு கர்நாடகா மாநில பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.2013-ல் கர்கலா துணைப்பிரிவின் ஏஎஸ்பியாக தனது காவல்துறை பணியைத் தொடங்கிய அண்ணாமலை, உடுப்பி மற்றும் சிக்கமங்களூரு மாவட்டங்களின் எஸ்.பி. ஆக இருந்தார். நேர்மையான மற்றும் கண்டிப்பான ஐபிஎஸ் அதிகாரியாக பெயர்பெற்ற அண்ணாமலை, உடுப்பி மாவட்டத்தில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோது, ​அந்த மாவட்ட மக்கள் அவரது பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு மக்களின் பேராதரவை பெற்றவர் தான் இந்த அண்ணாமலை!

தனது அதிரடி நடவடிக்கைகளால் கர்நாடக மக்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றவர் குமாரசாமி கர்நாடகா மாநில முதல்வராக இருந்தபோது, அண்ணாமலையை தானாக முன்வந்து பெங்களூரு நகர காவல்துறைக்கு பொறுப்பில் கொண்டுவந்தார். அந்த அளவுக்கு அவர் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். கடைசியாக அண்ணாமலை, பெங்களூரு தெற்குப் பகுதியின் துணை போலீஸ் கமிஷனராக இருந்தபோது ராஜினாமா செய்து பதவியில் இருந்து விலகினார். இவர் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகர் ஆக ஐபிஎஸ் அண்ணாமலை உள்ளார். தமிழக ஊடகங்கள் இவரைப்பற்றிய அதிரடியான தகவல்களை கூற மறுக்கின்றது

இரு நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு பாடநுால் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திமுக பேச்சாளர் ஐ.லியோனியை நியமித்து ஆணை பிறப்பித்தார். இந்த நியமனதிற்கு எதிராக அரசியல் கட்சியினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் பெண்களை கேவலமாக பேசியவருக்கு மதிப்புமிக்க பதவியை வழங்குவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மிகப்பெரிய கனவுகளோடு துவங்கப்பட்ட பாடநுால் கழகத்தில், முதலில் தகுதியான பல கல்வியாளர்கள், மேலாண்மை இயக்குனர்களாக இருந்துள்ளனர். அதன்பின், அரசியல்வாதிகள் உள்ளே நுழைய ஆரம்பித்தனர்.
ள்ளிக் கல்வித் துறையில் மிகவும் முக்கியமான பதவியே, இந்த பாடநுால் கழகத் தலைவர் பதவி தான். அது, ஒன்றுக்கும் உதவாத பதவியல்ல. அத்தகைய பதவிக்கு நியமிக்கப்படுபவர், குறைந்தபட்சம் பெண்களை கேவலப்படுத்திப் பேசாத, கண்ணியவானாக இருக்க வேண்டாமா?

இன்றைக்கும் இணையதளத்தில், லியோனியின் பல அருவருப்பான பேச்சுகள் அடங்கிய, ‘வீடியோ’க்கள் காணக்கிடைக்கின்றன. அதைப் பார்க்கக்கூடிய மாணவர்களும், பெற்றோரும், இவரது தகுதி பற்றி என்ன நினைப்பர்? அப்படிபட்ட நபருக்கு, மதிப்புமிக்க பாடநுால் கழக தலைவர் பதவியை வழங்குவதா என, அரசியல் கட்சியினர் பலரும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பேசுகையில் பெண்களின் இடுப்பை பற்றி விமர்சித்தார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இவர்தான் தற்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவர். ஐ.லியோனி

Exit mobile version