சூர்யா 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய இருளர் பவுண்டேசன் உலகத்திலேயே இல்லையாம்! மோசடி வழக்கு பதியப்படுகிறதா?

பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா – சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் முதல்வரிடம் இழங்குடி இருளர் சமூகத்திற்கு 1 கோடி நன்கொடை கொடுத்ததில் உள்ள பித்தலாட்டம் தற்போது ஆதரங்களோடு வெளிவர தொடங்கியுள்ளது.

ஜோதிகா – சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்த திரைப்படம் ஜெய்பீம் இந்த திரைப்படம் தினம் ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஆரம்பத்தில் எந்த அளவிற்கு தூக்கி கொண்டாடப்பட்டதோ தற்போது அதே அளவிற்கு மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது. உண்மையை மறைத்து திருத்தி எடுக்கப்பட்டபட்ட படம் எனவும் வன்னியர் மற்றும் இந்துக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் என்று விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

உண்மையை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் உண்மை சம்பவத்தில் அந்தோணி சாமி என்ற கேரக்டரை பெயரை ஏன் குரு என சித்தரித்தும் அவர் வீட்டில் வன்னியர்கள் அடையாளமான அக்னி கலசம் இடம்பெற்றது போல் ஒரு காட்சி வைரலாக பரவியது. இது வன்னியர் மக்களிடையே மிகப்பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது பின் வன்னியர்களின் கடும் எதிர்ப்பை கருத்தில் கொண்டு பணிந்தது ஜெய் பீம் பட குழுவினர்.

மேலும் இப்படத்தின் வெளியீட்டின் போது முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சூர்யா மற்றும் ஜோதிகா 2 டி னதயாரிப்பு நிறுவனம் சார்பாக வழங்கிய விவகாரத்தில் உள்ள திராவிடத்தனம் அம்பலமாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாஜகவின் அஸ்வத்தமான் மதமாற்ற மாபியா களுக்கு நெருங்கிய தொடர்புடைய இந்த படத்தினுடைய தயாரிப்பாளர் இதை எல்லாம் ஏன் செய்தார் என்பது உள்ளங்கை நெல்லக்கனி . இவர் இருளர் சமுதாயத்திற்கு 1 கோடி கொடுத்ததாக சொல்வதும் நம்பர் 1 டுபாக்கூர் தான். அவர் அந்த மக்களுக்கு கொடுக்கவில்லை. ஒரு மிஷனரி NGOக்கு தான் கொடுத்தார். அதாவது அங்கிருந்து வாங்கி அங்கேயே கொடுத்துள்ளார். என ஒரு குண்டை தூக்கி போட்டார்.

தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்த காசோலையில் இருக்கும் ‘PAZHANKUDI IRULAR EDUCATIONAL TRUST’ என்ற பெயரில் NGO அரசு இணைய தளத்தில் இல்லை எனவும். இது புதிதாக தொடங்கபட்டதா? இன்னும் பதிவு செய்யபடவில்லையா? அதன் நிர்வாகிகள் யார் யார்? என விவரமும் ஏதுவும் அதிகாரப்பூர்வமாக இல்லை எனவும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

இந்த பழங்குடி இருளர் சமூகத்திற்கு இல்லாத பவுண்டேசனுக்கு 1 கோடி நன்கொடை கொடுத்ததில் மிகப்பெரும் பித்தலாட்டம் செய்துள்ளார். அந்த 1 கோடி சூர்யாவின் சொந்த சம்பள பணமோ, 2D தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த பணமோ அல்ல.எங்கயோ வாங்கி அவர்களிடமே கொடுத்து இவரின் படத்தை விளம்பரப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட நடிகர் சூர்யா மீது வருமான வரி துறை சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Exit mobile version