கொரானா மூன்றாவது ஸ்டேஜ் முடியப்போகிறதா?


நியூயார்க்கில் கொரானாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை பாருங்கள்…இது தான் 3 வது ஸ்டேஜ். கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் பல தரப்பட்ட மக்களிடையே உருவாகும் தொடுதலால் ஏற்படக்கூடிய பரவல்.

இதுதான் டேஞ்ச ரான ஸ்டேஜ்.இந்த ஸ்டேஜில் தான் நாம் இருக்கிறோம் .ஆனால் இந்த மூன்றாவது ஸ்டேஜில் இந்தியா அமெரிக்கா இடையே கொரானாவினால் ஏற்பட்ட பாதிப்பின் வித்தியாசம் தான் ஆச்சரியத்தை அளிக்கிறது.

அமெரிக்காவில் நியூயார்க்கையும் இந்தியாவில் மகாராஷ்டிராவையும் எடுத்துக் கொண்டால் கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் அதிகமாக உள்ள மாநிலம் மகாராஷ்டிராதான்.

ஏனென்றால் மகாராஷ்டிராவில் ஒரு சதுர கிலோ
மீட்டரில் 365 பேர் வாழ்கிறார்கள்.

ஆனால்நியூயார்க் மாநிலத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 162 பேர் தான் இருக்கிறார்கள்.இருந்தாலும் நியூயார்க்கில் ஏன் அதிக மான பாதிப்புகள்?ஒரு வேளை இந்தியாவில் இறக்குமதி யான கொரானோவின் வீரியம்
குறைவாக இருக்கிறதோ..

கொரானா வைரஸ் இந்தியாவில் தோன்றி யது அல்ல அது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களினால் இறக்குமதியான வைரஸ் தான் .இப்படி வந்தவர்களால் இந்தியாவில் உண்டான பாதிப்புகள் தான் ஸ்டேஜ்-1

அடுத்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் இடையே பரவுவது
தான் ஸ்டேஜ்-2 என்கிற லோக்கல் டிரான்ஸ்மிசன்.

இப்பொழுது இந்தியா3 வது ஸ்டேஜுக்கு செ ன்று விட்டாலும் இது பற்றிய ஒரு சரியான புரிதல் இல்லை இது எப்பொழுது ஆரம்பித்தது என்பது தான் கேள்விக் குறியாக இருக்கிறது.இந்த கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் நியூயா ர்க்கில் ஒரு வாரத்திலேயே நடைபெற்று விட்டது. அமெரிக்காவில் மட்டுமல்ல நிறைய நாடு களில் 3 வது ஸடேஜ் மிகவிரைவாக வந்து விட்டது.

மகாராஷ்டிராவில் மார்ச் 9 ம்தேதி புனேயில் ஒரு தம்பதியினருக்கு கொரானா தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தான்
மகாராஷ்டிரா வில் முதல் கொரானா கேஸ்.இந்த தம்பதிகள் குவைத்தில் இருந்து வந்தவர்கள்.அடுத்த மறுநாள் அதாவது மார்ச் 10ம் தேதி அந்த தம்பதியினர் க்கு நெருக்கமான 3 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டது.

மார்ச் 11 ம் தேதி மும்பையில் இருந்த இருவ ருக்கு கொரானா பாதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இந்த இருவரும் துபாயில் இருந்து புனேக்கு வந்த தம்பதியின் நெருங்கிய உறவினர்கள்.அதே 11 ம் தேதி அமெரிக்காவில் இருந்த 4 பேருக்கு கொரானா வின் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்து. 13ம்தேதி அமெரிக்காவில் இருந்து வந்தவர்களின் உறவினர்களுக்கு பரவியது அடுத்து 14 ம் தேதி அமெரிக்கா துபாயில் இருந்து வந்தவர்களுக்கு கொரானா இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.அடுத்து 15 ம் தேதி ரஷ்யா மற்றும் கசகஸ்தானில் இருந்து வந்த வர்களுக்கு கொரானா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

16 ம்தேதி அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர் வீட்டுக்கு சென்ற பிறகு அவரின் மனைவி மற்றும் 3 வயது குழந்தைக்கும் பரவியது.ஆக மகாராஸ்டிராவில் கொரானா பரவ ஆரம்பித்த 9 ம் தேதியில் இருந்து 16 ம்
தேதி வரை ஒரு வார காலத்தில் 37 பேருக்கு நோய் பரவி இருந்தது.

இப்பொழுது நியூயார்க்கை பார்ப்போம்.

அமெரிக்காவில் நியூயார்க்கில் மார்ச் 1 ம் தே தி ஈரானில் இருந்து வந்த ஒரு பெண் மூலமாக அவருடைய கணவருக்கு பரவியது.அடுத்து மார்ச் 3 ம் தேதி இஸ்ரேல் நாட்டில் இருந்து நியூயார்க் வந்த ஒரு லாயருக்கு இருந்தது.மார்ச் 4 ல் லாயரின் மனைவி மகன் மகள் பக்கத்தில் இருந்தவர்கள் என்று 9 பேருக்கு பரவியது.

அதே மார்ச் 6 ம் தேதி புதிதாக இந்த லாயர்க்கு உறவினர் அல்லாத வேறு ஒரு விதத்தில் தொடர்புடைய 22 பேருக்கு புதியதாக நோய் தொற்று ஏற்பட்டது.அதாவது லாயர் வீட்டுக்கு பால் பாக்கெட் போட வந்தவர் மூலமாக பரவி யது.இது தான் கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன்.

இப்படி 6ம் தேதியே 44 ஐ தொட்டு கொரானாவின் 3 வது ஸ்டேஜ் நியூயார்க்கில் தெரிந்துவிட்டது. 7 ம் தேதி அந்த இஸ்ரேலில் இருந்து
வந்த லாயர் இருந்த வெஸ்ட்செஸ்டர் கவுண்டியில் கொரானோ 89 பேருக்கு பரவியது மார்ச் 8 ல் 108 பேருக்கு பரவி விட்டது.இதில் யாரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர் கிடையாது.

இப்பொழுது மகாராஷ்டிரா மற்றும் நியூயார்க்க் இரண்டு மாநிலங்களிலும் முதல் ஸ்டேஜான வெளி நாட்டவர்களினால் தான் கொரானா இறக்குமதியாகி 2 வது ஸ்டேஜான உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் லோக்கல் டிரான்ஸ் மிசன் மூலமாக பரவியது அறிந்துகொள்ளலாம்.

ஆனால் நியூயார்க்கில் மூன்றாவது் ஸ்டேஜ் ஒரே வாரத்தில் வந்து விட்டது. இப்படிக்கும் மகாராஷ்டிரா நியூயார்க்கை விட மக்கள் தொகை மிகுந்த மாநிலம்.அதுமட்டுமின்றி நியூயார்க்கை விட நிறைய வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வழியாக லோக்கல் டிரான்ஸ்மிசன் மூலமாக கொரானா மகாரா ஷ்டிராவில் தான் ஸ்டேஜ் 1ல் பரவியது.

இப்பொழுது நாம் யோசிக்க வேண்டிய விசய ம் என்னவென்றால் அமெரிக்கர்களை காட்டிலும் இந்தியர்கள் தான் வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு உறவினர்கள் நண்பர்கள் என்று எல்லோரையும் தேடி செல்வார்கள்.

இப்படி தேடிசென்றவர்கள் மூலமாக உருவான லோக்கல் டிரான்ஸ்மிசன் மக்கள் அடர்த்தி மிகுந்த மகாராஷ்டிராவில் நியூயார்க்கை விட முன்னதாகவே நடைபெற்று இருக்க வேண்டும்..புகழ்பெற்ற தொற்றுநோய் நிபுணர், டாக்டர் ரமணன் லக்ஷ்மிநாராயன் அவர்கள் என்டிடிவி க்கு அளித்த பேட்டியில் நாம் 100 சதவீதம் 3வது ஸ்டேஜில் இருக்கிறோம் என்றே கூறி இருக்கிறார்.

நியூயார்க்கில் இஸ்ரேலில் இருந்து வந்த ஒருவர் மூலமாகவே 3 நாட்களில் 30 பேருக்கு இடையே நடைபெற்ற கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் மகாராஷ்டிராவில் 6 க்கும் மேற்பட்ட வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் ஏன் பெரியளவில் நடைபெற வில்லை.

நியூயார்க்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு தனித்தனியாக வீடு கார் என்று தனிமைப்பட வாய்ப்புகள் இருந்தும் எப்படி இவ்வளவு வேகமாக கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் நடைபெற்றது? மகாராஷ்டிராவில் தான் நியூயார்க்கை
விட மக்களின் உறைவிடம் போக்குவரத்து என்று பொதுவாகவே இருக்கிறது.

எனவே மகாராஷ்டிராவில் தான் கம்யூனிட்டி டிரான்ஸ் மிசன் உடனடியாக நடந்து இருக்கவேண்டும். ஆனால் அது ஏன் நடைபெறவில்லை. லோக்கல் டிரான்ஸ்மிசனுக்கும் கம்யூனிட்டி டிரான்ஸ் மிசனுக்கும் இடையில் எந்த
ஒரு காலக்கெடுவும் கிடையாது என்பதை நியூயார்க்கில் ஒரே வாரத்தில் கொரானா 3 வது ஸ்டேஜுக்கு பரவியதில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் மகாராஷ்டிராவை அடுத்து இந்தியாஇன்னொரு மாநிலமான கேரளாவி ல் ஜனவரி 30 ம் தேதியே முதல் கொரானா கேஸ் சீனாவில் உஹானில் இருந்து வந்தவர் மூலமாக பதிவானது.அதற்கடுத்து மார்ச்
மாதம் 8 ம் தேதியில் இருந்து இத்தாலியில் இருந்து வந்தவர்களால் கேரளாவில் கொரா னாவினால் பாதிக்கப்பட்ட அவர்களின் எண் ணிக்கை அதிகமானது.

இப்பொழுது மகாராஷ்டிரா தான் கொரானா வினால் 74 பேர் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் இருக்கிறது.2 வது இடத்தில் உள்ள கேரளாவில் கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்க ளின் எண்ணிக்கை 67ஆக இருக்கிறது. கேர ளாவில் மக்கள் தொகைஅடர்த்தி மிக அதிகமான மாநிலங்களில் கேரளா பீகார் மேற்கு வங்காளத்தை அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

கேரளாவில் ஒரு சதுர கிலோமீட்டரில் 859 பேர் வாழ்கிறார்கள்.அங்கேயும் மூன்றாவது ஸ்டேஜான கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் முன்பே ஆரம்பித்து இருக்க வேண்டும்.இருந்தாலும் நியூயார்க்கை விட 5 மடங்கு மக்கள் தொ கை அடர்த்தியை உடைய கேரளாவில் பரவல் பெரியளவில் இல்லை.

இருக்க காரணம் இந்திய தட்பவெப்ப நிலை யில் கொரானாவினால் சீனா அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளைப்போல வேகமாக பரவ முடிய வில்லை என்பதே உண்மையாக இருக்க முடியும்.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version