தென்னிந்தியாவில் தனது செல்வாக்கை உயர்த்த பாஜக தேசிய தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதற்கு பல முக்கிய தலைவர்களை தென்னிந்தியாவில் களமிறக்கவும் முடிவு செய்துள்ளது பாஜக தலைமை.
ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அம்மாநில அரசின் ஆட்சியை விமர்சனம் செய்துள்ளார். பொதுமக்கள் கூட்டத்தில் பேசிய அவர், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இந்துக் கோயில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்துக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கக் கோரியுள்ளார்.
சர்ச்சுகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.மசூதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் இந்து கோயில்கள் மட்டும் ஏன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்? என்று பவன்கல்யாண் ஆந்திராவில் மக்களின் முன் கேட்கும் பொழுது கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.
ஆந்திராவில் வளர பாஜகவின் துருப்பு சீட்டாக இப்போதைக்கு பவன் கல்யாண்மட்டுமே இருக்கிறார். இதனால் பவன் கல்யாணை பாஜகவில் இருந்து இழுத்து தெலுங்கு தேசம் கூட்டணிக்கு கொண்டு வர சந்திர பாபு நாயுடு முயற்சித்து கொ ண்டே இருக்கிறார்.
இதனால் பவன் கல்யாணின் மார்கெட்சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. மத்தி ய பிஜேபி ஆந்திராவில் பவன் கல்யாணிடம் ஜன சேனாவை பாஜகவுடன் இணையுங்கள் ஆந்திராவின் பாஜக தலைவர் நீங்கள் தான் ஆந்திராவின் அடுத்த முதல்வரும் நீங்கள் தான் என்று பவன் கல்யாணிடம் பேசிக் கொண்டுவருவதாக தகவல்கள் வெளிவருகிறது.
பவன் கல்யாணும் இதற்கு செவிசாய்ப்பர் என்ற பேச்சுக்கள் அடிபகிறது. மேலும் பவன் கல்யாண் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் இந்துத்வா அரசியலை முன்னெடுத்து பேசிக்கொண்டு இருக்கிறார்.பவன் கல்யாணைமுன் வைத்து ஆந்திர அரசியலை கைப்பற்றபாஜக தலைமை நினைக்கும் முயற்சிகள் வெற்றி பெற நிறைய வாய்ப்புகள் உள்ளது
ஏனென்றால் ஆந்திராவில் ரெட்டி கம்மாக்களுக்கு இணையாக உள்ள காபூக்கள்அரசியலில் பெரிதாக அங்கீகரிக்கபட வில்லை. சிரஞ்சீவி மூலமாக தங்களுக்கும் அரசியல் அடையாளம் கிடைக்கும் என்று நினைத்தார்கள்.ஆனால் ராஜசேகரரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு என்கிற அரசியல் ஜாம்பவான்களின் முன்னால் சிரஞ்சீவியால் வெற்றி பெற முடியவில்லை.
ஆனால் தற்போது தெலுங்கு தேசம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் பவன் கல்யாண் மூலமாக காபூக்களை முன் வைத்து பாஜக ஆந்திர அரசியலை மாற்ற முடியும். இன்னொரு முக்கியமானஅரசியலை ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து பிஜேபி எடுத்து செல்ல வாய்ப்புகள் இருக்கிறது.இப்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை ஜனாதிபதி வேட்பாளராக பிஜேபி அறிவித்து அவரும் வெற்றி
பெற்று ஜனாதிபதியாக தேர்வானால்ஆந்திரா மட்டுமல்லாமல் தெலுங்கானாவும் பிஜேபியின் வசமாக வாய்ப்புகள் இருக்கிறது.
பிஜேபி வெங்கையா நாயுடுவை ஜனாதி பதியாக்கினால் ஆந்திராவில் கம்மா நா யுடுக்களும் காபூக்களும். கை கோர்த்துபிஜேபியின் பின்னால் அணி திரள வாய்ப்புகள் இருக்கிறது. அதை வழி நடத்தும்
வலிமை பவன் கல்யாணிடம் நிச்சயமாகஇருக்கிறது என்பதை அவருடைய இந்த பேச்சே எடுத்து காட்டுகிறது.