மோடியின் அமெரிக்க பயணத்தின் மிகபெரிய வெற்றி என்பது அமெரிக்காவுக்கு கடத்தபட்ட சிலைகளை மீட்டிருப்பதுஇந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தபட்ட அல்லது விற்கபட்ட சுமார் 157 சிலைகளை திருப்பி கொடுக்க அமெரிக்க அரசு முடிவு செய்திருக்கின்றது.
இதில் பெரும்பான்மையான சிலைககள் தமிழக சிலைகள்இதுவரை இச்சிலைகளை மீட்க நேரு முதல் மன்மோகன்சிங் வரை எந்த அரசும் முயற்சிக்கவில்லை, வாஜ்பாய் காலத்தில் சில பொருளாதார தடைகள் இருந்ததால் அவராலும் முழு வெற்றி பெற முடியவில்லைமோடி இதில் அசத்தியிருக்கின்றார்,தன் தேர்ந்த தொடர்புகள் மூலம் அமைச்சர்கள் மூலம் அதை சாத்தியமாக்கியிருக்கின்றார் பிரதமர் மோடி.
தாயகம் திரும்பிய நிலையில் அச்சிலைகளை திருப்பி அனுப்பும் வேலைகள் சுறு சுறுப்பாக அமெரிக்காவில் தொடங்கிவிட்டன.இதில் மிகபெரிய தமாஷ் அல்லது வேதனை என்னவென்றால் இந்த சிலைகளில் தமிழ்நாட்டு சிலைகளும் உண்டு, ஆனால் அவை எதெல்லாம் என கண்டுகொள்ள தமிழ்நாட்டு இந்து அறநிலையதுறையிடம் அடையாளமோ இல்லை பட்டியலோ ஆதாரமோ இல்லை.இவை தமிழக இந்து ஆலய சிலைகள், ஆனால் அவைகள் எந்த ஆலயத்து சிலை? எப்பொழுது காணாமல் போயின என்ற ஒரு விவரங்களும் இந்து அறநிலையதுறையிடம் இல்லை”நான் அமெரிக்காவில் அறுத்து தள்ளியவன், என் தாத்தா இந்து அறநிலையதுறையினை ஏற்படுத்தினார்” என தன் வெற்றிலை வாயால் அடிக்கடி சொல்லும் “ஆகாய சூரன்” தமிழக நிதியமைச்சர் அமெரிக்காவில் இருந்தபொழுது இச்சிலைகளை பற்றி சிந்தித்தாரா, நேரில் கண்டாரா?
இல்லை அவற்றை மோடி கொண்டுவரும் பொழுது தமிழகத்தில் எந்த கோவில் என சிலை என சொல்லத்தான் இவரால் முடியுமா ? இந்து அறநிலையதுறை எந்த அளவு இந்து கோவில்களை சீரழித்தது என்பதற்கு களவு போன சிலைகளும், அவற்றை மீட்டு வந்தாலும் அதுபற்றிய கோவில் அடையாளமில்லா அவல நிலையுமே மிகபெரிய சாட்சி.
கட்டுரை வளத்துடன் சிந்தனையாளர் ஸ்டாண்லி ராஜன்.