கடந்த 22ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவால் காலமான மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர், மற்றும் முன்னாள் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களது உடலுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று காவல்துறை மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினார்.
நாங்கள் மதமாற்றம் தான் செய்கிறோம், யாராவது கேள்வி கேட்டால் அவர்களது மூக்கிலேயே குத்துவோம் என வன்முறை பேச்சுகளை பேசியவர தான் இந்த பேராயர் சற்குணம். அவருடைய இறப்பிற்கு நேரில் சென்று காவல்துறை மரியாதையுடன் அஞ்சலி செலுத்தியதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,
எங்கே போகிறது திராவிட மாடலின் பாதை ! எஸ்ரா சற்குணத்திற்கு அரசு மரியாதை !
சிறுபான்மை நல ஆணையத்தின் முன்னாள் தலைவர், பாதிரியார் எஸ்ரா சற்குணம் மறைவிற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி நடைபெற்றது.
சமூக நீதி என முழங்கும் அரசு இவரைப் போன்றவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்.இவரைப் போன்றோருக்கு சிறுபான்மை ஓட்டுக்காக காவல்துறையின் மாண்புகளை குறைக்கும் விதமாக, இறுதி மரியாதை செலுத்திய திமுக அரசை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
நாங்கள் மதமாற்றம் தான் செய்கிறோம், யாராவது கேள்வி கேட்டால் அவர்களது மூக்கிலேயே குத்துவோம் என வன்முறை பேச்சுகளை பேசியவர்.
பாரதப் பிரதமர் மோடி அவர்களை பற்றி அவதூறாக பேசியவர். இப்படி சமுதாயத்தில் பிரிவினை ஏற்படுத்தி மதக்கலவரம் ஏற்படுத்திட தூபம் போட்டவர்.
சமுதாயத்தில் தொண்டாற்றியவர்களுக்கு மக்கள் நலனுக்காக உழைத்தவர்களுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் எஸ்ரா சற்குணம் அவர்கள் அவர் சார்ந்த கிறிஸ்துவ மதத்திற்கு மட்டுமே ஆதரவாக பேசியவர். அவருக்கு எதற்கு அரசு மரியாதை ? இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















