பெரியார் சுயமரியாதைப் பிரசார அறக்கட்டளை சார்பாக திருச்சி சிறுகனூரில் 135 அடி உயர சிலை வைக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துளளது. ஈ.வே.ராவுக்கு 135 அடி சிலை என்பது தவறான செயல் என பல கண்டன குரல்கள் எழுந்தது.
பெரியார் சுயமரியாதைப் பிரசார அறக்கட்டளை திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் என்ற மிகப் பெரிய வளாகம் ஒன்றை 27 ஏக்கர் நிலத்தில் அமைகிறது. இங்கு அமையவிருக்கும் பெரியார் சிலை, 95 அடி உயரம் கொண்டது. அதன் பீடத்தின் உயரம் 40 அடி. ஆகவே மொத்தமாக 135 அடி உயரம் இருக்கும். இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செயலாளராக இருக்கிறார்.
இதற்கு கிட்டத்தட்ட 100 கோடி வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. என்று செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளது. இதற்கான முழுச் செலவையும் பெரியார் சுயமரியாதைப் பிரசார அறக்கட்டளையே செய்யவிருக்கிறது”
இதனிடையே ஈ.வே.ராக்கு சிலை அமைக்கும் நேரத்தில் அதே திருச்சி பகுதியில் சுதந்திர போராட்ட வீரரும் தமிழக இளைஞர்களின் நம்பிகையாக திகழ்பவரும் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு 150 அடி சிலை வைப்பதற்கு முயற்சிகளில் இறங்கியுள்ளார். திருமாறன் ஜி, தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி
இது குறித்து தின சேவல் ஆன்லைன் செய்தி தளம் நேரடியாக திருமாறன் ஜி, அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அமைப்பது குறித்து அவர் கூறியதாவது:
திருச்சியில் 150அடி உயரத்தில் பசும்பொன் தேவர் சிலை அமைய இருக்கும் வளாகத்தில் நூலகம், பொழுது போக்கு பூங்கா, பசும்பொன் தேவர் குறித்த அருங்காட்சியம் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம் பெற இருப்பதாக தெரிவித்த திருமாறன் ஜி, இதற்காக தொடர்ந்து முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தும், முக்குலத்தோர் அமைப்புகளை சந்தித்தும் பேசி வருவதாகவும், அனைவரும் அதற்கான ஆதரவை தெரிவித்து வருவதாக கூறினார்.
மேலும் திருச்சியில் தேவர் சிலை அமைய இருக்கும் இடத்தை தேர்வு செய்யும் பணிக்காக, இந்த வாரம் திருச்சி சென்று ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்த பின்பு, இடத்தை தேர்வு செய்யும் பணியை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். 150அடி உயரத்தில் அமைய இருக்கும் தேவர் சிலைக்கான செலவுகளை முக்குலத்தோர் அமைப்புகள் ஒன்றிணைத்து ஏற்று கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
டம் தேர்வு செய்யும் பணி இந்த வாரத்தில் தொடங்கும்
நன்றி : தினசேவல் ஆன்லைன் செய்தித்தளம்
