நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல், மேடை கிடைத்ததும், ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி திருமாவளன் ஆகியோர் தற்பெருமை பேசியே நான்கு ஆண்டுகளை ஓட்டி விட்டனர்.ஆனால் தமிழகத்தில் நடக்கும் அவலங்களை தினம் தோறும் பட்டியலிட வேண்டும். அவ்வாறு நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதியில் தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரையில், ஒரு மாதத்தில் நிகழ்ந்த 38 கொலைகள், தமிழகத்தையே பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன. 48 மணி நேரத்தில் எட்டுக் கொலைகள் நிகழ்ந்திருப்பது, மக்களை அச்சத்தில் உறையவைத்திருக்கிறது. இந்தக் கொலைகளில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியது, நெல்லையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.ஐ ஜாகிர் உசேன் பிஜிலி கொடூரமாக வெட்டிச் சாய்க்கப் பட்ட கொலைச் சம்பவம்தான்.
ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகார்களை போலீசார் கண்டுகொள்வதில்லை. அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே போலீசார் பயன்படுத்தப்படுகின்றனர்.இது ஒருபுறம் இருந்தால் பாலியல் குற்ற சம்பவங்கள் அடிதடி சாதி ரீதியான பிரச்சனைகள் என பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளது திமுக கூட்டணி அரசு.
கடலூரில் கள்ள நோட்டு புழக்கம் இருப்பதாக காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளருக்கு சொந்தமான இடத்தில் கள்ள நோட்டு கும்பல் கைது செய்யப்பட்டது. இந்த நிலையில் கள்ள நோட்டு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சுமார் ஒரு மாதத்திற்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் செல்வம் (வயது- 39) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வருகிறார்.இவருக்கு சொந்தமான வயலில் தகர சீட் கொட்டாய் அமைத்து அதில் கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரங்களை வைத்து கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட்டு வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் காலை அவரது வயலில் உள்ள தகர சீட் கொட்டகைக்கு சென்ற போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விசிக பிரமுகர் செல்வம் அங்கிருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது கள்ள நோட்டு அச்சடித்தது புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது. தொடர்ந்து கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வாக்கி டாக்கிகள், அச்சடிக்கும் பேப்பர், ரூ. 83,000 – ரொக்க பணம், வாக்கி டாக்கி – 1, லேப்டாப் – 1, ஏர்கன் – 1, பிஸ்டல் ஏர்கன் – 1, கவுண்டிங் மெஷின் – 1, பிரிண்டிங் மெஷின் – 1, பேப்பர் பண்டல் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விவசாய நிலத்தில் ஷெட் அமைத்து கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் செல்வம் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கள்ள நோட்டு அச்சடிக்கும் விவகாரத்தில் சிக்கிய செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
இது ஒரு புறம் இருக்க கள்ளநோட்டு கும்பலை கைது செய்ய கடலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடைபெற்ற நிலையில் செல்வம் எங்கிருக்கிறார் என கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஒட்டுமொத்தமாக கள்ள நோட்டு கும்பல் தலைமறைவான நிலையில் வழக்கை முடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் செல்வத்தின் உறவினர் ஒருவரின் செல்போனை ரகசியமாக கண்காணித்த போது அவருடன் கர்நாடகாவில் உள்ள நபர் பேசி வருவது தெரிய வந்தது. இதனையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் அது செல்வம் தான் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து கர்நாடகா விரைந்த தமிழ்நாடு போலீசார் அங்கு பதுங்கி இருந்த செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் ஐந்து பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கள்ள நோட்டு விவகாரத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்கின்றனர் போலீசார்.இந்த நிலையில் கள்ள நோட்டு கும்பலுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் உள்ள கள்ள நோட்டு கும்பலுடன் செல்வத்துக்கு தொடர்பு இருக்கிறதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், ஆகியவை பிடிபட்டுள்ளதால் நக்ஸல்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணை திரும்பியுளது. மேலும் இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகாமை களத்தில் இறங்க உள்ளது. ஏற்கனவே தேசத்திற்கு எதிராக பேசிய விசிகவினர். சேலத்தில் வனத்துறை அதிகாரிகளை தாக்கிய விவகாரம் .. இந்து கோவில்கள் குறித்து திருமா விமர்சனம் மேலும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியது போதை பொருள் கடத்தல் விவகாரம் என விசிக பழைய பைல்களை தூசு தட்ட ஆரம்பித்துள்ளது மத்திய புலனாய்வு அமைப்பு இதனிடையே கள்ளநோட்டு விவகாரம் சேர்ந்திருப்பதால் வரும் தேர்தலில் வி.சி.க கட்சி இருக்குமா என பேச ஆரம்பித்துவிட்டார்கள்.