மதம் மாற மறுத்த கல்லூரி மாணவியை சுட்டு கொன்ற தௌபீக்! லவ் ஜிகாத்தின் கொடூரம்!

மதம் மாற சொல்லி வற்புறுத்திய தௌஃபீக் அதை ஏற்றுக்கொள்ளாத மாணவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கொடூரம் லவ் ஜிஹாத்தின் மற்றொரு கொடூர சம்பவம் ஹரியானாவில் அரேங்கேறியுள்ளது.ஹரியானா மாநிலத்தில் உள்ள பலப்கர் பகுதியை சார்ந்த மாணவி நிகிதா. கல்லூரியில் பட்ட படிப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சார்ந்தவன் காமுகன் தவ்பீக் இவன் பிழைப்பு அழகான வேறு மத பெண்களை காதல் வலையில் விழவைத்து அவர்களை மதம் மாற்றுவது ஆகும். லவ் ஜிகாத் செய்பவன்

இந்த நிலையில் நிகிதாவை தனது காதல் வலையில் விழவைத்து அவரை மதம் மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளான் தௌஃபீக் லவ் ஜிகாத்க்கு வற்புறுத்தியுள்ளான்.

லவ் ஜிகாத் நாடக காதல் வலையில் கல்லூரி மாணவி நிகிதா துளியளவும் விழாத நிலையில், காதலை புரிய வைக்கிறேன் என்று பல வித்தைகள் புரிந்தும் பலனில்லை. மேலும், மாணவி கல்லூரியில் இருந்து ஒருநாள் வருகையில் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி நிகிதா, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தவ்பீக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது அவன் சிறையில் இருந்து வெளியான நிலையில், மாணவியை பழிவாங்க நேரம் பார்த்து காத்திருந்துள்ளான். மாணவி கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு, இன்று தனது தோழியுடன் சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்துள்ளார்.

முன்னதாகவே காரில் வந்த தவ்பீக், தனது நண்பருடன் நிகிதாவை கடத்தி செல்ல முயற்சித்துள்ளான். அவனிடம் இருந்து மாணவி தப்பித்துவிடவே, ஆத்திரமடைந்த தவ்பீக் அவரை சுட்டு கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் சாலையில் வைத்து பட்டப்பகலில் நடைபெற்றுள்ளது.

நிகிதாவுடன் வந்திருந்த தோழி செய்வதறியாது திகைக்கவே, அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், நிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நாடககாதலன் தவ்பீக்கை கைது செய்துள்ளனர். மேலும், இந்த விஷயம் தொடர்பான விடியோக்கள் பெரும் வைரலாகியுள்ள நிலையில், நிகிதா சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் முதல் கட்ட விசாரணையில், மதம் மாற மறுத்த நிகிதாவை தௌபீக் சுட்டுக் கொன்றதாக நிகிதா குடும்பத்தினர் தெரிவித்தனர். நிகிதா ராணுவத்தில் சேர விரும்பியதாகவும் அதற்குள் இவ்வாறு நடந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

Exit mobile version