தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு சென்றவரின் குடும்பத்திற்கு பரிசோதனை! மருத்துவக் குழுவை அடித்து நொறுக்கிய இஸ்லாமிய மக்கள்

இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.இந்த நிலையில் இந்த தப்லிக் ஜமாத் மாநாடு சம்பவம் நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிக் ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு ஒட்டு மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு இசுலாமிய மத குருக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டமானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.

தப்லிக் ஜமாத் மாநாட்டில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் தாக்கம் தெரியாமல் 9 ஆயிரம் இஸலாமியர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.


இந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தெலுங்கானா திரும்பிய 6 இஸ்லாமியர்கள் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு பலியானார்கள். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஒருவரும் பலியானார். இதனை தொடர்நது டெல்லி தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஏன தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 1100 இஸ்லாமியர்களை கொரோனா பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டனர். இதில் கிடத்த தட்ட 80 % டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு அய்யனார் ஊத்து கிராமத்தை சேர்ந்த ஒருவர் டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பினார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அய்யனார்வூத்து கிராமத்தை தனிமைப்படுத்தபட்ட பகுதியாக அறிவித்த மாவட்ட நிர்வாகம், அந்த கிராமத்தை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கு நேற்று சனிக்கிழமை மாலை மருத்துவ குழுவினர், தாசில்தார் பாஸ்கரன், ஆய்வாளர் முத்து ஆகியோருடன் சென்றனர்.

சோதனை முடிந்து குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு புறப்பட தயாரான மருத்துவ குழுவினரை செல்ல விடாமல் தடுத்த அப்பகுதி இஸ்லாமிய இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் மருத்துவ குழுவினர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் சுகாதார ஆய்வாளர் காளிராஜின் சட்டை கிழிந்தது. செல்போனை பறித்துக்கொண்டு பைக்கையும் சேதப்படுத்தினர்.

நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட தாசில்தார் பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர், ஒருவழியாக அங்குள்ள ஊர் பெரியவர்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ குழுவினரையும், குடும்ப உறுப்பினர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவ குழு தாக்கப்பட்ட சம்பவம் மருத்துவ துறையினருக்கு தெரிந்து கயத்தாறு அரசு ஆஸ்பத்திரியில் கூடினர். அதன் பின்னர் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு வேண்டுமெனவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை ஏற்று சுகாதார ஊழியர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாகவே முன் எச்சரிக்கையுடன் குடும்பத்தினரை சிகிச்சைக்கு அழைத்து செல்கிறார்கள் என்ற புரிதல் கூட இல்லாமல் தாக்குதல் நடத்துவது கடுமையாக கண்டிக்கதக்கது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Courtesy: Polimer News

Exit mobile version