நிர்வாணமாக ஊர்வலம் தூக்கி செல்லப்பட்ட இஸ்ரேல் பெண் ராணுவ வீரர் ! பலஸ்தீன தீவிரவாதிகள் தாக்குதல்..சாலை முழுக்க சடலங்கள் !

திடீரென பாலஸ்தீனிய பயங்கரவாத குழு இஸ்ரேல் மீது 7000 ராக்கெட்டுக்குகளை வீசி இஸ்ரேலை நிலைகுலைய செய்துள்ளது.அதுமட்டுமில்லாமல் இஸ்ரேலில் தீவிரவாத குழுக்கள் ஊடுருவி இஸ்ரேலிய மக்களை சரமாரியாக சுட்டு கொன்று வருகிறார்கள். இதற்கு பதிலடி தேனும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் களமிறங்கி தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே போர்மூண்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற தீவிரவாத அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன.ஹமாஸ் அமைப்பை போன்றே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்பட மேலும் சில பயங்கரவாத அமைப்பும் காசா முனை, மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே, இஸ்ரேல் மீது ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட தீவிரவாத குழு நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

இஸ்ரேலில் சுமார் 26 இடங்க ளில் ஹமாஸ் அமைப்பில் உ ள்ள எஸெடீன் அல்- கஸ்ஸாம் பிரிகேட்ஸ் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இதுவரை சுமார் 100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.கடந்த 2008 ல் இந்தியாவில்மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் மாதிரியே இப்பொழுது இஸ்ரேலில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. நுழைந்த பயங்கரவாதிகள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் சமூகவலைதளங்களில் நேரலையில் ஒளிபரப்பும் செய்துள்ளனர். இஸ்ரேலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் இஸ்ரேலிய ராணுவ தளத்தையும் கைப்பற்றினர். இஸ்ரேலிய நகரங்களுக்குள் நுழைந்து கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். மேலும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர், பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என பலரையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணை கைதிகளாக சிறைபிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைகைதிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் காசா முனைக்கு கொண்டு சென்றனர். குறிப்பாக, இஸ்ரேலிய ராணுவ டாங்கிகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்கி அதில் இருந்து இஸ்ரேலிய வீரர்களை சிறைபிடிக்கும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. அதேபோல், இஸ்ரேலிய இளம்பெண் கொலை செய்யப்பட்டு அவரது உடலை நிர்வாணமாக காரில் வைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் கொண்டு சென்ற வீடியோவும் வைரலானது. மேலும், இஸ்ரேலிய பெண்ணை பைக்கில் ஹமாஸ் அமைப்பினர் கடத்தி செல்லும் வீடியோவும் வைரலானது.

இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 300 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலின் எல்லையோர நகரங்களில் சில பகுதிகளை ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால் அந்த பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் தொடங்கியுள்ளனர்.

மேலும், இஸ்ரேல் போர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஹமாஸ் அமைப்பு – இஸ்ரேல் இடையேயான மோதலில் இதுவரை 530க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் 2வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இதனால், இஸ்ரேல் – காசா இடையே உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version