நியூஸ் 18 குறித்து மாரிதாஸ் அவர்களின் வீடியோ வெளிவந்த பிறகு பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்றன. அதன் பின் நியூஸ் 18 சேனல் மற்றும் இதர சேனல்களில் இருந்து பல நெறிமுறை தெரியாத நெறியாளர்கள் தூக்கி ஏறியப்பட்டார்கள். அதில் சில நெறியாளர்கள் மலைமுரசு தொலைக்காட்சியில் சேர்ந்தார்கள். அதில் ஒருவர் தான் செந்தில்
மலைமுரசுவில் முரசங்கம் விவாத நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இதில் திமுகவினரால் தினமும் ஒரு தலித் ஊராட்சி மன்ற ஒன்றிய தலைவர்கள் அவமதிப்புக்குள்ளாகிறார்கள். இதனை மையப்படுத்தி சமூக நீதியும் சாதிக்கொடுமைகளும் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் அசுவத்தம்மன் கலந்து கொண்டார். அதில் பேசுகையில் 1939 ல் ஆலய நுழைவு சட்டம் கொண்டு வந்தார் ராஜாஜி என ஆதராத்தோடு விளக்கினார்.
இதை தாங்கி கொள்ள முடியாத நெறியாளர் அப்போது ஆங்கிலேயர் ஆட்சி அப்போது எப்படி என வரலாறு தெரியாமல் உளறி தள்ளினார். 1939 ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னராக செயல்பட்டவர் பிராமணர் ராஜாஜி அவர் இருந்த காலத்தில் ஆலைய நுழைவு சட்டத்ததை கொண்டுவந்தார் என்பது உண்மை. அதை எதிர்த்து பெரியார். என அஸ்வத்தமன் பேசினார். மேலும் அவர் பேசுகையில் சாதிய பிரச்சனைகளுக்கு திராவிட சித்தாந்தத்தின் குறைபாடுகளே எனவும் தெளிவுபடுத்தினார்.
ஆலயப்பிரவேசம்ஆலயப்பிரவேச சட்டம் இயற்றப்படுவதற்கும் முன்னரே, காந்தியவாதி ஏ.வைத்தியநாத ஐயர் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைய விடாமல் தாழ்த்தப்பட்டிருந்த சமூகத்தினருடன் 1939 ஜுலை 08 ஆம் தேதி கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தார். இதன் காரணமாக சிலர் உருவாக்கிய பிரச்சனைகளையும் நீதிமன்ற வழக்குகளையும் இவர் எதிர்கொண்ட சமயம், அப்போதைய முதல்வர் இராஜாஜி ஆலய பிரவேச சட்டத்தை அவசர சட்டமாக கவர்னர் பிரகடனம் செய்ய வழிவகை செய்தார்.காந்தியடிகள் இவரைப் பாராட்டி 22-7-1939 அன்று அரிஜன் இதழில் எழுதினார்.ஆலயப் பிரவேச சமயம் தியாகி தாயம்மாள் தம் வீட்டில் தாழ்த்தப்பட்டிருந்த மக்களைத் தங்க வைத்து, காலை உணவு வழங்கினார். அதன் காரணமாக அவரது உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.இந்த ஆலயப்பிரவேச நிகழ்வையடுத்தே உடனடியாக 1939 ஜூலை11ல் சென்னை மாகாண ஆலயப்பிரவேச சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட வர்கள் நுழைத்தால் கூட பிராமணர்கள் போல் ஆகிவிடமுடியாது அங்கும் அவர்கள் புத்தியைத்தான் காட்டுவார்கள் பெரியார் கூறியதை அந்த விவாத மேடையில் அஸ்வத்தாமன் கூறினார். ஆலய நுழைவு சட்டம் கொண்டுவந்தவர் ராஜாஜி எனும் பிராமணர் வைத்தியநாத அய்யர் எனும் பிராமணர் முத்துராமலிங்க தேவர். அதை எதிர்த்தவர் பெரியார் என்பதை வரலாற்றை திருத்தி பெரியார்தான் சாதியை ஒழிக்க பாடுபட்டார் என தமிழக திராவிட கட்சிகள் தமிழக மக்களை ஏமாற்றி வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.