தி.மு.க ஆட்சி வந்ததிலிருந்து பட்டியலினத்தவர் மீதான சாதி ரீதியான தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றது என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அதுவும் திமுக அமைச்சர்களே இச்செயலில் ஈடுட்டுள்ளார்கள் . இந்தநிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் பெயரைச் சொல்லி அவரது குடும்பத்தினர் போடும் ஆட்டம். வரம்பு மீறி செல்வதாக கோவை மக்கள் குமுறி வருகிறார்கள்.
கொடுத்த கடனை திருப்பிக் கேட்கிறார்கள் என்பதற்காக கடன் கொடுத்தவர் வீட்டுக்கு மேயரின் தம்பி குமார் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்தார். கோவை திமுக மேயர் கல்பனாவின் குடும்பத்தினர், அருகில் வசிப்பவரை வீட்டை விட்டு காலி செய்ய வைக்க வீட்டின் மாடியில் இருந்து சிறுநீரை ஊற்றுவது, பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களை வீசிவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதோடு அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் கோவையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்ட தி.மு.கபொது கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆள் சேர்த்துவதற்காக கோவையில் தி.மு.கவினர் மும்முறமாக ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை திமுக மேயர் கல்பனாவிற்கு அமைச்சர் தரப்பிலிருந்து சரியான மரியாதை தரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் அமைச்சர் மீது கடுப்பாகிபோன திமுக மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பணம் தருவதாக மக்களை வரவழைத்து பின்னர் தனக்கு ஆதரவாக உள்ள ஒரு சிலரை மட்டும் அழைத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் மேயரின் கணவர் ஆனந்தகுமார் பணம் தருவதாக வரவழைத்த மக்களை நீங்கள் எல்லாம் எஸ்.சி மக்கள் இங்கேயே இருங்கள் என்று நடுதெருவில் பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார். இதனால் கடுப்பான மக்கள் அவர்களின் உள்ள குமுறல்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர் அந்த வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.