காவல் நிலையத்திலிருந்து காணாமல் போன கணவனைக் கண்டுபிடிக்கப் போராடும் பழங்குடிப் பெண்ணின் போராட்டமே ‘ஜெய் பீம்’.இருளர் சமுதாய இனதினை சேர்ந்த ராஜாகண்ணு இவரை பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிர் இழக்கிறார் அவரது உடலை காட்டு பகுதியில் தூக்கி எறிகிறார்கள். ராஜ்கண்ணு மனைவி பார்வதியிடம் காவல் நிலையத்திலிருந்து ராஜகண்ணு இருந்து தப்பிவிட்டதாக காவலர்கள் கூறுகிறார்கள்.
உண்மையை கண்டுபிடிக்க ராஜாகண்ணு மனைவியின் போரட்டம் பார்வதி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சந்துரு, வக்கீலாக பணி செய்த போது இந்த வழக்கிற்காக சட்டப் போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தார். இது தான் இப்படத்தின் கதைக்களம்
இப்படம் குறித்து பல விமர்சனங்கள் நிலவுகிறது. முதலவர் ஸ்டாலின் பாராட்டுகிறார். இப்படத்தினை தூக்கி வைத்து கொண்டாடினார். இருளர் சமூகம் சமூகத்தில் இந்த நிலையில் இருப்பதற்கு திராவிடம் தான் காரணம் என்ற ரீதியில் துப்புரவு தொழிலாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
ஜெய் பீம் படம் குறித்து துப்புரவு தொழிலாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் கூறியுள்ளதாவது:
ஜெய்பீம் திரைப்படம் உணர்த்துவது என்ன? கிட்டத்தட்ட 54 வருட திராவிட ஆட்சியில், அதுவும் காவல்துறையை முதல்வர்களே கவனிக்கும் துறையாக இருந்தும் எஸ்சி மக்கள் முதல் இருளர்கள் வரை சமூகநீதி, சமத்துவம் கிடைக்கவில்லை என்பதைத் தான் இப்படம் உணர்த்தி இருக்கிறது.
ஆனாலும் தமிழ்நாடு ஈவெரா மண், சமூகநீதி மண் என்று சொல்வதில் இருக்கிறது ஏமாற்று அரசியல். ஈவெராயிஸம், திராவிடயிஸம் எதுவும் சாதிக்கவில்லை, தோல்வி தான் அடைந்துள்ளது என்பதை உணர்த்தும் படம்தான் ஜெய்பீம் என்று கூறியுளளார். மேலும் இவர் துப்புரவு தொழிலாளர் ஆணைய தலைவர் என்பதால் இவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இவரின் இந்த விமர்சனம் திராவிடக்கட்சிகளுக்கு சவுக்கடி போல் அமைந்துள்ளது. மேலும் மா. வெங்கடேசன் படம் குறித்து ம் இருளர்கள் வாழ்க்கை குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் தமிழகத்தினை 70 ஆண்டு காலமாக வரும் திராவிட கட்சிகளின் உண்மை முகத்தினை தோலுரித்துள்ளது என பலரும் மா.வெங்கடேசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.