திரை உலகத்தை இரண்டாக பிரித்த ஜெய் பீம்! சூர்யாவுக்கு எதிராக திரும்புகிறதா தயாரிப்பாளர்கள் சங்கம்! JAI BHIM

ஜெய் பீம் திரைப்படம், தற்போது மிகபெரும் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. படத்தை தாண்டி சாதி பிரச்சனையாக வெடித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிர்வாகமான சூர்யா தயாரிப்பில் உரிய விளக்கம் கொடுக்க மறுக்கிறார்கள். ஜெய் பீம் சர்ச்சைகுள்ளான காட்சிகள் என்பது சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை தொடர்ந்து ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்தது. மேலும் அச்சமுதாய அமைப்புகள் தனித்தனியாக போர்க்கொடி துாக்கி போராட்டங்கள் நடத்தின.

மேலும் ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள் அந்தோணிசாமி என்ற பெயர் மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிகிறார்கள். மேலும் ஆங்காங்கு பாட்டாளி மக்கள் கட்சியின் குறியீடுகளை வைத்துள்ளார்கள் என்பது குற்றச்சாட்டு. மேலும் அந்தோணிசாமியை குருவாக மாற்றி மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள் இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எம்10′ தயாரிப்பு நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் வெளியிட்ட அறிக்கை: படைப்பு என்பது சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என கருதுபவன் நான். சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும், அதை சீர்குலைக்காமல் வைப்பது ஒவ்வொரு கலைஞனின் தார்மீக கடமை என்பதை, ‘வேதம் புதிது’ படம் எடுத்தவருக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

ஒரு சமுதாயத்தை தவறாக சித்தரித்து, படம் எடுத்ததை கண்டித்து, அந்த சமுதாய தலைவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லாமல், குறைந்தபட்ச வருத்தம் கூட தெரிவிக்காமல், சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் சூர்யா, தயாரிப்பாளர் சங்கத்தால் கண்டிக்க வேண்டியவரே.

சுதந்திரம் என்ற பெயரில், ரோட்டில் நிர்வாணமாக நடப்பது, இந்த சமூகத்திற்கு எவ்வளவு பெரிய அசிங்கமோ அதுபோன்ற அசிங்கம் தான், சூர்யா குறிப்பிடும் படைப்பு சுதந்திரம். ஆகச்சிறந்த படைப்பில் பெரும் விஷம் கலந்த குறியீடுகளும், புனைவு பெயர்களும் எதற்காக? ‘குறியீடுகளை நீக்கி விட்டோம்’ என சப்பைக்கட்டு கட்டுவது, சிறந்த கலைஞரின் சிறந்த பண்பு அல்ல. இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

இதன் மூலம் திரை உலகம் தற்போது இரண்டாக உடைந்துள்ளது தெரியவந்துள்ளது.மேலும் இனி சூர்யா நடிக்கும் படங்கள் தியேட்டரில் ஒளிபரப்பு செய்ய திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் யோசித்து வருகிறது. அமேசான் மதம் மாற்றும் அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது. எனவே தான் ஜெய் பீம் படம் அமேசானுக்கு விற்கப்பட்டது என தகவல்களும் வெளியாகியுள்ளது.

எதற்கும் துணிந்தவன் ஏன் தியேட்டரில் படம் ரீலிஸ் பண்ணாமல் ஓடிடியில் வெளியிட்டார்.? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version