மோடியின்_மகள் திட்டம் துவக்க விழா…
கோவை மாநகரில் தந்தையை இழந்து தாயின் அரவனைப்பில் உள்ள நூறு பெண் குழந்தகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் மோடியின் மகள் திட்டத்தொடக விழாவில்…
பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவரும் கோவை மக்கள் சேவை மையத்தின் நிறுவனருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.
வானதிசினிவாசனின் கோவை மக்கள் சேவை மையத்தின் மூலமாக மோடிமகள் திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு கல்வி தொகையாக ஆண்டிற்கு 10000/- ரூபாயிக்கான காசோலை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது…
தீபாவளித் திருநாளை முன்னிட்டு அக்குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்க்கும் துணிகள்,பட்டாசுக்கள் மற்றும் இனிப்புகளையும் கோவை மக்கள் சேவை மையத்தின் மூலமாக அக்கா வழங்கினார்..
ஜெ பாணியில் கோயம்புத்தூர் பகுதியில் வானதி சீனிவாசன் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
கோயம்புத்தூர் பகுதியில் பெண்களுக்கான கோலப்போட்டி, ஃபேஷன் ஷோ ,குழந்தைகள் நலத்திட்டம் ,கடை வைத்துள்ள பெண்களுக்கு நிவாரண உதவி கடனுதவி உள்ளிட்ட பல பணிகளை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்து வருகின்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















