தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறாதது ஏன்? மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

‌டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாதது குறித்து விளக்கமளித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் பல்வேறு மாநிலங்களின் பெருமைகளைப் பறைசாற்றும் விதமாக, அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் செல்லும். இந்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு அந்தந்த மாநிலங்கள், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சிதம்பரனார், பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் உருவங்கள் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் இடம்பெற்றிருப்பது என்றும், அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக மேசைகளை தேர்ந்தெடுப்பதர்கான நன்கு நிறுவப்பட்ட அமைப்பு உள்ளது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இதன்படி பாதுகாப்பு அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலிருந்தும் வாகன ஊர்திக்கு முன்மொழிவுகளை அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அப்படி அனுப்பப்படுபவை, மத்திய அமைச்சகங்கள்/துறைகள், கலை, கலாச்சாரம், ஓவியம், சிற்பம், இசை, கட்டிடக்கலை, நடனம் போன்ற துறைகளில் தலைசிறந்த நபர்களை உள்ளடக்கிய நிபுணர் குழு உள்ளது. அவர்களே அட்டவணை பரிந்துரைகளை மதிப்பீடு செய்வர்.

ZEE Tamil vs Annamalai தனியார் தொலைக்காட்சியை சம்பவம் செய்த அண்ணாமலை

அதன் பரிந்துரைகளை செய்வதற்கு முன் கருப்பொருள், கருத்து, வடிவமைப்பு மற்றும் அதன் காட்சி தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் முன்மொழிவுகளை ஆராய்கிறது. அவை அனைத்துக்கும், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் தேர்வுக்கு தெளிவான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

இப்படியாக தமிழ்நாடு மாநிலத்தின் முன்மொழிவு உட்பட மொத்தம் 29 திட்டங்கள் பெறப்பட்டிருந்தன. அதில் முதல் 3 சுற்றுகள் வரை தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பரிசீலிக்கப்பட்டது. ஆனால் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: Puthiyathalaimurai

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version