அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளர்
இந்த நிலையில் மாணவி லாவண்யா திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக திருக்காட்டுப்பள்ளிகாவல்துறை மாணவி லாவண்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, விடுதியில் தன்னை துன்புறுத்தினார்கள் அதன் காரணமாக கூறியதால் தான் மனம் உடைந்து பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறினார். இதனைத்தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து பள்ளி விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர்
ஆனால் மாணவி லாவண்யா மதம் மாற மறுத்ததால் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை நிர்வாகத்தால் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மாணவி லாவண்யா இறப்பதற்கு முன்னர் பேசிய வீடியோவில் இரண்டாண்டுக்கு முன் என் குடும்பத்திடம் ராச்சேல் மேரி ஆசிரியர் கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறுங்கள் என்று கூறினார்கள். ஆனால் அப்பா அம்மா மதம் மாற மறுத்துவிட்டார்கள். அதன் பின் என்னை விடுதியில் அதிகமாக துன்புறுத்தினார்கள்.என மாணவி லாவண்யா பேசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மாணவியின் உயிரை பறித்த மதமாற்ற கும்பல் சார்ந்த கல்வி நிறுவனத்தை நிரந்தமாக மூட வேண்டும். என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது போன்று வேறு பள்ளிகளில் நடைபெறாமல் இருக்க விசாரணை குழு அமைக்க வேண்டும்.மாணவியின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணமும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலையும் தர வேண்டும் கட்டாய மதமாற்ற செய்பவர்களை கடுமையாக தண்டிக்க சட்டமியற்ற வேண்டும். என்ற குரல்கள் எழுந்துளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு களத்தில் இறங்கியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் ஆறுமுக கனி அவர்களிடம் பேசினோம். அவர் கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட மாணவி லாவண்யாவுக்கு நீதி கிடைக்கும்வரை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஓயப்போவது கிடையாது. அதன் முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் முத்துவேல் தலைமையில் இன்று 19.01.2022, உண்ணாவிரதப் போராட்டத்தை வி.ஹெச்.பி நடத்த இருக்கிறது.இந்து மாணவியை கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தி, துன்புறுத்திய தூய இருதய மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.அதுவரை பல்வேறு போராட்டங்களை நடத்த இருக்கிறோம்’ என்று கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















