விநாயகர் துதி
வெண்ணீ றணியும் விமலன் புதல்வா பெண்ணா முமையாள் பெற்றிடுந் தேவே அரிதிரு மருகா அறுமுகன் துணைவா கரிமுக வாரணக் கணபதி சரணம்
குருவே சரணம் குணமே சரணம்
பெருவயிற் றோனே பொற்றாள் சரணம் கண்ணே மணியே கதியே சரணம் விண்ணே யொளியே வேந்தே சரணம் ! ,
இன்று
ஞாயிற்றுகிழமை!
சார்வரி வருடம் :
சித்திரை மாதம்!
13ஆம் தேதி !
ஏப்ரல் மாதம் :
26 ஆம் தேதி !!
(26-04-2020)
சூரிய உதயம் :
காலை : 05-59 மணி அளவில் !!
இன்றைய திதி :
இன்று பிற்பகல் 12.21 வரை திருதியை ! பின்பு சதுர்த்தி !!
இன்றைய நட்சத்திரம் :
இன்று இரவு 09.38 வரை ரோஹிணி பின்பு மிருகசீரிஷம் !
யோகம் :
இன்று இரவு 09.38 வரை அமிர்தயோகம் ! பின்பு சித்தயோகம் !!
இன்று :
மேல் நோக்கு நாள் !
நல்ல நேரம் :
காலை :
07-30 மணி முதல் 08-30 மணி வரை !
மாலை :
03-30 மணி முதல் 04-30 மணி வரை!!
சந்திராஷ்டமம் :
விசாகம் ! அனுஷம் !!
ராகுகாலம் :
மாலை : 04.30 மணி முதல் 06-00 மணி வரை !
எமகண்டம்
பிற்பகல் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!
குளிகை :
பிற்பகல் : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!
சூலம் : மேற்கு !
பரிகாரம்: வெல்லம் !
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பழமையான குடைவரைக் கோயில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும், குன்றக்குடி முருகன் கோயிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், மற்றும் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 47 கி.மீ. தொலைவிலும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.
இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது.இக் கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 மீட்டர் உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது.குகைக் கோயிலில், சிவன் மற்றும் பிற கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆகம கல்வெட்டுக்களில் எழுதியுள்ளபடி இக் கோயில், 1091 மற்றும் 1238ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.
குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கோயில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில் என்பதை அறியலாம். 4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோயிலில் உள்ளது. மேலும், கல்வெட்டுகள் மூலமாக, எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் போன்றவை இத் தலத்தின் முற்காலப் பெயர்கள் என அறிய முடிகிறது.
இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்.
ஸ்ரீ கற்பகவிநாயகர் அருளாலே இன்றைய நாளும் திருநாள் ஆகட்டும்
சௌஜன்யம்..!
அன்யோன்யம் .. !!
ஆத்மார்த்தம்..!
தெய்வீகம்..!.. பேரின்பம் …!!
அடியேன்
உங்கள் மஹேந்திர வர்மன் திருச்சுழி
Get real time update about this post categories directly on your device, subscribe now.














