கவுன் போட்டு வந்த கமல்… வாம்மா துரையம்மா…. வச்சு செய்த நெட்டிசன்கள்..

தனியார் ‘டிவி’யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில், நடிகர் கமல் பெண்கள் அணிவது போன்ற நீண்ட கவுன் அணிந்து வந்து, நிகழ்ச்சியைதொகுத்து வழங்கினார். இது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளது. கவுன் போட்டு வந்த கமலை பற்றி ரசிகர்கள் மட்டுமின்றி, கட்சி நிர்வாகிகளுக்கும் பிடிக்கவில்லை.

ஒரு கட்சியின் தலைவராகவும், வரும் லோக்சபா தேர்தலில் வேட்பாளராகவும் இருக்கும் கமல், இன்னும் அதற்கான இமேஜை உருவாக்கவில்லை என்றும் இன்னும், ‘டிவி’ நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடிகராகவுமே இருக்கிறார் என்றும் கட்சி தொண்டர்கள் விவாதித்து வருகின்றனர்.

மேலும், கமல் அணிந்த கவுன், மருதநாயகம் பட துவக்க விழாவுக்கு சென்னைக்கு வந்த, இங்கிலாந்து ராணி மறைந்த எலிசபெத்தை ஞாபகப்படுத்துவதாக, ‘நெட்டிசன்’களும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை குவித்துவருகின்றனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version