தமிழ்நாட்டு தேர்தல் ஒரு காலமும் கொள்கை சார்ந்து நடந்தது அல்ல, இங்கு காமராஜர் இருந்தவரை காங்கிரசுக்கு ஒரு கொள்கை இருந்தது அவரோடு அதுவும் சமாதியாகி அதிகாலை காகங்கள் போன்ற கொள்கையினை காங்கிரஸ் கொண்டாயிற்று.
ஆம் எங்கே எது கிடைக்குமோ அங்கே ஓடி கொண்டே இருப்பார்கள்
திமுகவின் கொள்கை எது என யாருக்கும் தெரியாது, திராவிடம் என்பார்கள் தமிழ் என்பார்கள். சரி திராவிடம் என்னாயிற்று, தமிழ் வளர்ச்சி என்னாயிற்று என்றால் பதில் தெரியாது
தனிநாடு அடைந்தால் மட்டுமே சாத்தியபடும் சில முழக்கங்களை எழுப்புவார்கள் ஆனால் தனிநாடு கோரமாட்டார்கள் கொள்கை அது அல்ல என்பார்கள்
அவர்களின் வெளிதெரிந்த கொள்கை ஒன்றே ஒன்றுதான் அது அப்பட்டமான இந்து வெறுப்பு, இன்றுவரை அதிலேதான் இருக்கின்றார்கள்
விபூதி கொட்டி விளையாடுவார்கள், இந்து கோவில் என்றால் பரிகசிப்பார்கள், இந்து பண்டிகை என்றால் விடுமுறை என்பார்கள், பெரியார் என்பார் இன்னும் அது தொடர்கின்றது
ஆனால் இஸ்லாமிய கிறிஸ்தவ பண்டிகை என்றால் மட்டும் அந்த ராம்சாமி மறந்தே போவார்
அதிமுகவுக்கு என்ன கொள்கை என அதன் நிறுவணர் ராம்சந்தருக்கே தெரியாது, அண்ணாயிசம் என்பார் அதை விளக்கி சொல்ல தெரியாது காரணம் அண்ணாயிசம் என்பது அந்தவெளி அங்கு எதுவுமே இல்லை
ராம்சந்தர் ஜெயாவுக்கு இருந்த ஒரே கொள்கை கருணாநிதி எதிர்ப்பு, கருணாநிதி இல்லா நிலையில் அதை கலைக்கத்தான் வேண்டும் ஆனால் செய்யமாட்டார்கள்
மற்ற எல்லா கட்சிக்கும் இதே நிலைதான், கம்யூனிசம் தெரியா கம்யூனிஸ்டுகள், மலையகம் அறியா தமிழ்தேசியம் என எல்லாமே குழப்ப ரகம்
கமலஹாசனின் கட்சி ஐன்ஸ்டீனின் தத்துவம் புரிந்தாலும் புரியா மர்மம் இதில் அவர் கொள்கையினை ஒளித்து வைத்திருக்கின்றாராம்
ஆனால் சாதி கட்சிகள் எக்காலமும் கொள்கை உள்ளவை, சிறிய கட்சி என்றாலும் கொள்கை அவர்களிடமே உண்டு
இப்படி கொள்கையே இல்லா கழக கட்சிகள் இதுகாலம் ஜாதி என்ற ஒன்றை வைத்து அரசியல் செய்தன, சாட்சாத் இதை தொடங்கி வைத்தது திமுக மற்றும் அதிமுக.
மதசார்பற்ற கட்சி கூட்டணி என்பார்கள் ஆனால் ஜாதி சார்பற்ற கட்சி கூட்டணி என சொல்லவே மாட்டார்கள்
இப்படி இதுகாலமும் சாதி சிறுபான்மை என்ற கோணத்திலே நடந்த தேர்தல் முதல் முறையாக மதமும் நுழையும் தேர்தலாய் இருக்கின்றது
பாஜகவின் எழுச்சி, ஓவைசியின் வரவு இவை எல்லாம் மத ரீதியான தேர்தலை நோக்கி காட்சிகளை நகர்த்துகின்றன
இது அதிமுகவுக்கு சாதகமானது நிச்சயம் சாதகமானது
திமுகவுக்கு இனி இரண்டே வாய்ப்பு ஒன்று வீரமணியுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் அல்லது இந்து எதிர்ப்பு மட்டும் என்பதை “ஆமா.. நாங்க அப்படித்தான்” என பகிரங்கமாக ஒப்புகொள்வது.
இங்கு நடப்பது எல்லாமே மாற்றங்கள், தலைகீழ் மாற்றங்கள். இது பெரும் அதிரடி திருப்பங்களை கொடுக்கும் அல்லது பெரும் மாற்றத்துக்கு வழிகோலும்
கழகங்கள் இதனால் மெல்ல சாகும் என்பது மட்டும் உண்மை.