இராணுவத்தில் இருந்து விடுமுறைக்காக சொந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த இராணுவ வீரர்கள் 26 பேரையும், ஒரு கைக்குழந்தை ஒரு பெண் உள்ளிட்ட 10 பேரும் ஆக 36 பேரையும் கொரோனா தொற்று சோதனைக்காக ஆற்றூர் மரியா கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர் இங்கு அடிப்படை வசதிகள் இல்லையென்று தனிமைப்படுத்தப்படட்டவர்கள் எழுப்பிய குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் இன்று நேரடியாக முகாமுக்கு சென்று இராணுவ வீரர்களையும், மற்றவர்களையும் சந்தித்து குறைகளை கேட்டார்.
முகாமில் முகாமிட்டிருந்த கிராம அதிகாரி, மற்றும் அரசு தரப்பை சேர்ந்தவர்களிடமும் விவரங்களை கேட்டார், இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் இந்த முகாம் திறக்கப்பட்டதால் இருந்த இடையூறுகளை சரி செய்துள்ளோம் என்றார்கள்.
பொன். இராதாகிருஷ்ணன் கைக்குழந்தை மற்றும் தாய்க்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் கழிவறை வசதிகள், கொசுத்தொல்லை, குடிநீர் வசதிகள், படுக்கை வசதி, மின்விசிறி ,போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தார், குடிப்பதற்கு அனைவருக்கும் வென்னீர் தான் கொடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இவற்றின் ஏற்பட்டில் நாங்கள் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம் என்று உறுதியும் கூறி.
அங்கிருந்த மக்களின் கருத்துக்களையும் மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவிக்கிறேன் என்றும் கூறினார்.
முகாமில் இருந்தவர்கள் பொன்.இராதாகிருஷ்ணன் வருகைக்காக மனப்பூர்வமாக நன்றி தெரிவித்தார்கள்.
பாஜக இளைஞர் அணி மாநில செயலாளர் சிவபாலன், ஒன்றிய தலைவர் சுவாமிதாஸ், ஒன்றிய பொதுச்செயலாளர் உண்ணி@சுரேஷ்குமார், வழக்கறிஞர் லெவென், ஐடி பொறுப்பாளர்கள் திருராஜன் மற்றும் பல நிர்வாகிகள் உடனிருந்தனர்…
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















