???? 19.4.2020 ஞாயிற்றுக்கிழமை
☑️ நாமும் ஸ்ரீசனீஸ்வரர் வழிபட்ட முறையில், இல்லங்களில், 60 நாழிகையும், 24 மணி நேரமும் பூஜித்தல் வேண்டும்.
☑️அதாவது கரிநாளில் பூஜிக்கின்ற ஸ்ரீசனீஸ்வரரை நாமும் பூஜிக்கின்றோம் என்பதால் பூஜா பலன்கள் நன்கு பெருகும்.
☑️மன ஊனங்கள் பல உண்டு. பிறரை ஏமாற்றியது, பிறர் பொருளை அபகரித்தது, பிறர் சொத்தை (ஆபீஸ் டெலிபோனைப் பயனபடுத்துவது உட்பட) அனுபவித்து வாழ்வது, தீய வழக்கங்கள், பொய் சொல்லி வஞ்சகம் செய்து ஏமாற்றியது, தனக்கு உரிமை இல்லாததை, மனத்தாலோ, உடலாலோ, உள்ளத்தாலோ அனுபவித்தது, அனுபவிக்க முயற்சித்தது, தவறாக எணணங்கள் தோன்றியது – போன்ற பலவும், வெளியில் சொல்ல முடியாத பல சம்பவங்களை மனதை ஊனமாய் அரித்துக் கொண்டிருப்பனவும் மன ஊனங்களாகும்.
❔இவற்றிற்கு என்றுதான் பரிகாரம் செய்வது?
☑️இதற்காகத்தான் கரிநாள் பூஜைகளை நமக்கென இறைவன் படைத்திருக்கின்றான்.
????????இன்று ஸ்ரீசனீஸ்வரரையும்,
????????அவருடைய தந்தையான ஸ்ரீசூரியரையும் (பிதா),
????????சனீஸ்வரரின் தாயான ஸ்ரீசூரிய மகாதேவியையும் (மாதா) வணங்கி,
????????ஸ்ரீசனீஸ்வரருடைய குருவையும் “ஸ்ரீசனீவரருடைய அதீத குருவே போற்றி!” (குரு) என்று ஓதிப் போற்றியும்,
????????மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதாக இறுதியாக, ஸ்ரீசனீஸ்வரர் வழிபட்ட மூர்த்தியை, பெருமாளை (திருச்சி அருகே துடையூர், குச்சனூர், கும்பகோணம் – சோழபுரம், நவபாஷாணம்) வணங்குதல் வேண்டும்.
☑️இதனால் பெற்றோர்களுக்குக் கடமைகளை ஆற்றத் தவறிய தவறுகளுக்கு ஓரளவுப் பிராயச்சித்தம் கிட்டும்.
☑️தாயாரின் ஏக்கங்களை, விருப்பங்களை நிறைவேற்ற இயலாத நிலையில் தாயார், இறந்திட அதனை எண்ணி, எண்ணி இன்றும் வேதனைப்படுவோர், கரிநாளில் விளங்குளம் சனீஸ்வர (பூச)த் தீர்த்தத்தில் தர்ப்பணம் ஆற்றி வர வேண்டும்.
☑️இத்தகைய கரிநாள் பூஜைகளால் உங்கள் சந்ததிகளும், உங்களைத் தவிக்க விடாது காப்பாற்ற “ராஜலோசனப் பித்ரு பத்னிகள்” உதவுவர்