தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இளைஞரணி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகின்றார்.இளைஞரணியினரை உற்சாகப்படுத்தும் வகையிலும் அமைப்பை கிளை வரை பலப்படுத்தவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். இராமநாதபுரத்தில் இருக்கு மிக பிரமாண்ட வகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது . தேனியிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது தமிழக அரசியலில் மிக பெரும் புயலை கிளப்பியது. 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் படை சூழ இளைஞரனியின் மாநில தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் நீட் தேர்வுக்கு இலவச வாகன வசதி திமுகவின் பள்ளிகள் முன்பு போராட்டம் என அதிரடி அறிவுப்புகளும் பாஜக இளைஞரணி சார்பில் வெளியிடப்பட்டது. இதனால் திமுக தரப்பு சற்று கதி கலங்கியது. பாஜக இளைஞரணி மிகவும் வேகமாகவும் துடிப்புடனும் செயல்படுவது திரவிட கட்சிகளிடையே ஒரு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதன் ஒருபகுதியாக இன்று நாகை மாவட்ட இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் திரு.கருப்பு முருகானந்தம் மற்றும் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் ப செலவம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் இதனை தொடர்ந்து திருவாரூரில் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க சென்ற அவரை வரவேற்க்க 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள் வந்ததால் திருவாரூரே ஸ்தம்பித்து நின்றது.மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருவாரூரில் பா.ஜ.கவில் இவ்வளவு கூட்டம் இதுதான் முதல்முறை என்கிறார்கள் பகுதி மக்கள். இதனை கண்ட திமுகவினர் எப்படி இந்த நேரத்தில் இவர்கள் இத்தனை நபர்கள் வந்தார்கள் என்று கலக்கம் அடைந்துள்ளனர்.இதை அறிந்து கொண்ட அந்த மாவட்ட நிர்வாகம் படை சூழ வந்த இளைஞரணியை நடுவழியில் நிறுத்தியுள்ளார்கள்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்றாலும் பா.ஜ.க இளைஞரணி திருவாரூரை ஸ்தம்பிக்க வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய ஊர்வலம் போல் இந்த வாகன பேரணி அமைந்தது, பாஜகவின் இளைஞர் அணி மிகவும் 2021 தேர்தலுக்கு பாஜக தயாராகிவிட்டது என்பதே இந்த காட்சி உறுதி படுத்துகிறது. இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் போகும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதே போல் தமிழக பாஜக மாநில தலைவர் இன்று கோவை மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு சென்றுள்ளார் அங்கும் பாஜகவின் ராஜ்ஜியமே நடக்கிறது . 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் புடைசூழ கெத்து காட்டினார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன். ஒருபுறம் இளைஞரணி மறுபுறம் மாநிலத்தலைவர் முருகனின் சுற்றுப்பயணம் என பாஜக திருவிழா கொண்டாடி வருகிறது. தேர்தல் திருவிழா பாஜக ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.
பாஜகவின் தல தளபதிகள் ஆட்டம் ஆரம்பம்!